பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெளிவு


ஏ. எஸ். ராகவன் ஆற்றுப் பாலம் வரை நேர்க்கோடாக வந்த பாதை, திடீரென்று வலப்புறம் நோக்கித் திரும்பியது. சாலேயின் இருபுறமும் தென்னே மரங்கள் அணி வகுத்திருப்பதைப் பார்த்தால், ராணுவப் படை ஒன்று நிற்பது போல் தோன்றியது. வெற்றிலைக் கொடிக்கால்கள், வாழைத் தோட்டங்கள், கரும்பு, நெல் எல்லாம் திமிறிக் கொண்டு வளர்ந்திருக்கும் காவேரிப் பகுதி எட்டிய வரை பச்சைப் போர்வையாக விரிந்தது. - இன்னும் இரண்டே பர்லாங்குகள்தான் பாக்கி. மயிலேக் காளை உற்சாக மிகுதியில் நாலு கால் பாய்ச்சலில் ஒடிக்கொண்டிருந்தது. என்ருலும், வண்டி ஊர்ந்து செல்வ தாகவே அலமுவுக்குத் தோன்றியது. மனதின் வேகத்துக்கு அது ஈடு கொடுக்க முடியுமா ? வாய்க்கால் கரைப் பிள்ளையார் கோவில் வந்து விட்டது. அருகே படித்துறையில் பெண்களின் சிரிப்பும் பேச்சும் கேட்டன. வேம்பும் அரசும் பிணேந்து நின்றன. அவற்றின் கீழ் சில நாகர்கள். அலமு இந்தப் படித் துறையில்தான் தினமும் குளிப்பது வழக்கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிறுகதைக்_கோவை.pdf/37&oldid=830381" இலிருந்து மீள்விக்கப்பட்டது