பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33


பெண்ணின் விரக்தி கலந்த பேச்சு, கனகத்தின் வாயை மூடிவிட்டது. சரி, பல்லைத் தேய். காப்பி போட்டு வைத்திருக்கேன்........உங்கப்பாவுக்கு இப்பதான் கோர்ட் வேலே மும்முரமா வந்துடுத்தாம். திருச்சிக்குப் போயிருக்கார். .........எல்லாத்துக்கும் நான் கொடுத்து வைத்தது அவ்வ ளவுதான் !’ என்ருள். அலமு பெட்டியைக் குடைந்து கொண்டு உட்கார்ந் திருந்தாள். சமையற் கட்டின் நிலைப்படியைப் பிடித்துக் கொண்டு நின்ற கனகம், அவளேயே கூர்ந்து பார்த்துவிட்டு, அலமு, இது எத்தளுவது மாசம் ?’ என்று கேட்டாள்.

  • நாலுன்னு நினைக்கிறேன்’ என்ருள் அலமு. “ எழுதவே இல்லையே?’’ ‘ எழுதின போதெல்லாம் தரிச்சுதாக்கும்?’’
  • தரிக்கிறதுக்கும் தரிக்காததுக்கும் நீ என்ன பண்ணுவே? நன்ன யிருக்கடி நீ பேசறது. அசடு மாதிரி பேசாமல் போன நீ அலமு இல்லையே!”

“ என் வயிற்றெரிச்சலேக் கிளப்பாதே அம்மா. இங்கே யாவது நிம்மதியா இருக்கலாம்னு வந்தா.........” அலமுவின் கண்களில் நீர் துளிர்த்து விட்டது. கனகம் பயந்து விட்டாள். பெண் கண் கலங்குவது வயிற்றைப் பிசைந்தது. இது என்ன இப்படி? வந்ததும் வராததுமாக அபசகுனம் மாதிரி. தன் மீதே கோபம் வந்தது கனகத்துக்கு. எங்கே என்று காத்திருந்தவளைப் போல எடுத்த எடுப்பிலேயே தகராறுதான? அலமுவின் சுபாவம்தான் தெரிந்ததாயிற்றே ! “ பல்லைத் தேயம்மா. கண்ணைத் துடைச்சுக்கோ’’ என்ருள் அன்பு பொங்க. புழக்கடைப் பக்கம் சென்ருள் அலமு. ஒற்றைத் தனி மரமாய் நெடிது வளர்ந்திருந்தது பாக்கு. அருகில் மல்லிகைப் புதர். கனகாம்பரத்தின் சிவப்புச் சிரிப்பு. கொடி படர்ந்து குதுாகலிக்கும் புடலையும், அவரையும் இவற்ருேடு போட்டியிட்டுக் கொண்டு வேலிக்காலில் ஒரு 27–4 . . . . . .