பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 காட்டுக் கொடியின் ஆதிக்கம். காப்பியைக் குடித்துவிட்டு, மீண்டும் பெட்டியைக் குடையலாளுள் அலமு. புதிதாக ஏதாவது நகை செய்து கொண்டிருப்பாளோ ? அல்லது LᎻ L-5a5u வாங்கியிருப்பாளோ! கணவன் முந்நூறுக்கு மேல் சம்பாதிக்கிருன். பிச்சுப் பிடுங்கல் இல்லாத குடும்பம். செய்து கொள்வது பிரமாதமல்ல,

  • ஏண்டியம்மா, இப்பதான் புதுசு புதுசா என் னென்னவோ பார்டரிலே புடவை யெல்லாம் வந்திருக்கே .........நீ ஏதாவது வாங்கினயா?’ என்று கேட்டாள் கனகம். இந்தக் கேள்வி கேட்பதற்கு மனத்துள் வேறு நோக்கம் உண்டு. பெண்ணுக்கு இதமாக ஏதாவது பேசி, அவளது கோபத்தையும், முதல் முதல் இடறிய அபசகுனத்தையும் துடைக்கலாமென்பதுதான் அது.

ஆளுல் விளேவோ விபரீதமாக இருந்தது. வெறிக்கத் தாயாரையே பார்த்தாள் அலமு. “ அவ்வளவு தூரத்துக்கு இருந்தால், நான் ஏன் இப்படி இருக்கிறேன்?’ என்ருள். வாயைத் திறக்காதிருப்பதே உத்தமம் என்று தோன்றி விட்டது கனகத்துக்கு. ஏதாவது ஒன்று கேட்டால், அது ஒன்பதாகக் கிளேத்து விடுகிறதே ! வந்த நேரம் சரியில்லையா? சந்தடி செய்யாமல் சமையற் கட்டுக்குள் புகுந்து விட்டாள். அம்மா கேட்ட கேள்வியிலே அலமுவின் மனது லயித்து விட்டது. பெட்டியைக் குடைவதெல்லாம் வெறும் பாசாங்குதான். * பிரமோஷன் ஆகியிருக்கிறதாமே, அதைப் பற்றி ஒரு வார்த்தை சொன்னுரா கொண்டவ ளுக்கு அந்த உரிமைகூட இல்லை என்ருல், இல்வாழ்க்கைக்கு என்னதான் பொருள்? ஏதோ மாதிரி நடத்துவதைத் தவிர, அவளே ஒரு பெண்ணுக இதுவரை அந்த மனிதர் மதித்திருக்கிருரா? எப்போது பார்த்தாலும் ஆபீஸ், ஆபீஸ், ஆபீஸ்! பிரமாத ஆபீஸை இவர் ஒருத்தர்தானே ஆள்கிருர் : உலகத்தில் எல்லோரும் ஆபீஸுக்குப் போகவில்லையா, சம்பாதிக்கவில்லையா ? என்ன அதிசயமோ! முகத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிறுகதைக்_கோவை.pdf/40&oldid=830389" இலிருந்து மீள்விக்கப்பட்டது