பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37


நம்பிக்கையற்ற நிராசைப் பெரு வெளியில் அவளைத் தவிக்க விட்டு, உடலையும் உள்ளத்தையும் சோரச் செய்தானே தவிர, அன்பெனும் அரும்பை மலரச் செய்ததில்லை. அவனது மனத்தைக் கவர அவளும் படாதபாடு பட்டாள். விதம் விதமாக உடுத்திக் கொண்டாள். மலர் சூடி, மையிட்டு, முறுவலுடன் வழிபார்த்து நின்ருள். அவனே வீட்டுக்குள் கால் எடுத்து வைத்ததும், "எதற்காக இந்த அலங்காரம்?.........கண்ணேக் கூசுகிறது. எப்போதும் போல இரு, போதும் ' என்பான். இதற்கு என்ன அர்த்தம்? எவ்வளவோ அர்த்தம் கொள்ளலாம். தன் மீதே நம்பிக்கையற்ற பலவீனமும் ஒரு முக்கிய காரணம் எனலாம். தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விடுவான். - ' உடம்பு சரியில்லையா ?” “ எல்லாம் சரியாகத் தான் இருக்கிறது........விடிவ தற்குள் ஒரு ஸ்டேட்மெண்டு அனுப்பியாகணும்....... கணக்கில் எங்கோ உதைக்கிறது. கண்டு பிடித்தாகணும்.”

  • காப்பி கொண்டு வரட்டுமா ?”

多G . r உ.ம்............” எவ்வளவோ ஆசையுடன் தயாரித்த பலகாரமும், காப்பியும் அவன் முன் வைக்கப்பட்டாலும், ஒருவித உணர்ச் சியும் இன்றிச் சாப்பிட்டு எழுந்திருப்பான். முப்பது வயது வரை வாழ்க்கையின் மேடு பள்ளங்களில் உழன்று விட்டுத் தாமாக மணம் செய்துகொண்ட பிழையோ, வேறு எதுவோ, அவளுடைய உணர்ச்சிகளுக்கு அவன் மதிப்புக் கொடுத்ததே இல்லை. ஒரு வேளே. அவளுக்கு உணர்ச்சிகள் உண்டு என்பதையே அவன் அறிவானே என்னவோ? அர்த்தமற்ற பிணைப்பு: சாப்பாட்டுக் கவலையில்லை. அதை வாங்கிப் போட்டு விடுகிருன். தான் சம்பாதிப்பதே. அதற்காகத்தான் என்பதைத் தவிர, அவனுக்கு வேறு சிந்தனையே இல்லை. ஒரு துணை வேண்டுமே, அதற்காக