பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39


மென்று, " சரி, போயிட்டுத்தான் வாயேன்........அம்பு ஜம்கூடப் புறப்படுகிற சமயம்தான் ’ என்ருள். குழந்தை மாதிரிச் சிரித்துக் கொண்டு அம்புஜம் வந்தாள். “ என்ன அத்தை, பேரனு பேத்தியா ?...........” கனகத்தை அத்தை என்றே அழைப்பாள் அம்புஜம்.

  • எதுவோ ஒண்ணு.........நல்லபடியாப் பிறக்கணும்னு பகவானை வேண்டிண்டிருக்கேன்.”

" அதெல்லாம் கவலைப் படாதேங்கோ.........எனக்கு மாட்டுப் பெண்தான் பொறக்கப் போரு! என்ன சம்பந்தி யம்மா, இப்பவே பிடிச்சுக் கிராக்கி பண்ணிக்காதே. புறப்படு, வாய்க்காலுக்கு.’’

  • சரி, போயிட்டுச் சீக்கிரம் வாங்கோ.........வெய்யில் ஜாஸ்தியாகிறது.”

வழியில் ஓயாமல் பேசிக்கொண்டே இருந்தாள் அம்புஜம். அலமுவுக்கு அதை எல்லாம் கேட்கக் கேட்க மறைந்த தாபம் அதிகரிக்க ஆரம்பித்தது. படித்துறையில் குளிக்கும் போது மனது குளிர வேண்டுமே ! ஊஹூம்! வீட்டுக்கு வந்து சாப்பிட்டுப் படுத்ததும், கடிதம் எழுதிப் போட வேண்டும் என்ற நினைவு வந்தது. எழுதா விட்டால்தான் என்ன ? ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கவா போகிருர் ? - இரண்டு நாட்கள் கழித்து வேண்டா வெறுப்பாக ஒரு முக்காலணு கார்டு போட்டு வைத்தாள். செளக்யமாக வந்து சேர்ந்தேன். இங்கு எல்லோரும் செளக்கியம். அங்கு உங்கள் செளக்கியத்துக்கு எழுதவும்............குளிர் காலம், மப்ளரைக் கட்டிக் கொள்ளுங்கள்......இப்படிக்கு-அலமு.” மாதங்கள் உருண்டோடின. சீமந்தம் எப்போது வைத்துக் கொள்ளலாம், என்று அவள் தந்தை தேசிகாச்சாரி மாப்பிள்ளைக்கு எழுதிக் கேட்டார். அதெல்லாம் ஒன்றும் வேண்டியதில்லை’ என்று அவன் எழுதி விட்டான்.