பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 'பிரசாதம்’ AASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAAAS م. سرمي عميسر சுந்தர ராமசாமி எழுபத்தி மூன்று நாற்பத்தியேழு சுற்றிச் சுற்றி வந்தான். அன்றிரவே அவன் ஐந்து ரூபாய் சம்பாதித்தாக வேண்டும். அப்பொழுதுதான் தலை நிமிர்ந்து வீட்டை நோக்கிச் செல்ல முடியும். பொன்னம்மையின் முகத்தை ஏறிட்டுப் பார்க்க முடியும். அவள் சிரிப்பதைப் பார்க்க முடியும். எல்லாவற்றிற்கும் மேலாகக் குழந்தை பிறந்த நாளைக் கொண்டாட முடியும். ஜங்ஷனுக்கு வந்தான். ஜங்ஷனிலிருந்து புறப்பட்டு வளைய வளையச் சுற்றிவிட்டு, ஜங்ஷன் வந்தான். அதே ஜங்ஷன்தான். மெயின் ரஸ்தா ஓரத்தில், ஒரு புருஷனும் மனேவியும் ரஸ்தாவைத் தாண்டுவதற்கு பத்து நிமிஷமாக இரண்டு பக்கமும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டு நின்ருர்கள். அவள் ஒக்கலில் ஒரு குழந்தை. கோயிலுக்குப் போய்விட்டு: வருகிருர்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது. - இப்படித்தான் நானும் அவளும் நாளே கோயில் போய் வரவேண்டுமென்று நினைக்கிருள், அவள் என்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிறுகதைக்_கோவை.pdf/51&oldid=830412" இலிருந்து மீள்விக்கப்பட்டது