பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46


எண்ணினுன் அவன். குழந்தை பிறந்த நாளே எவ்வளவு கோலாகலமாகக் கொண்டாட ஆசைப்படுகிருள் அவள் ! அன்று மாலை பொன்னம்மை சொன்ன ஒவ்வொரு சொல்லும் அவன் ஞாபகத்திற்கு வந்தது. அவளுடைய ஆசையே விசித்திரமானதுதான். தெருவழியாகக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு நடந்து போகிற காட்சியை அவள் வியாக்கியானம் செய்ததை அவன் எண்ணிப் பார்த்துக் கொண்டான். . -நாளேவிடியக் கருக்கலில் எழுந்திருக்கவேண்டும். சுடு தண்ணிரில் குழந்தையைக் குளிப்பாட்ட வேண்டும். பட்டுச் சட்டை போட்டு, கலர் நூல் வைத்துப் பின்ன வேண்டும். அந்தப் பின்னலில் ஒரு ரோஜா. ஒன்றே ஒன்று. அதற்குத் தனி அழகு. நாம் இருவரும் குழந்தை யைக் கோயிலுக்கு எடுத்துச் செல்கிற பொழுது, தெருவில் சாணிதெளிக்கும் பெண்கள், கோலம் இழைக்கும் பெண்கள் எல்லோரும் தலை தூக்கித் தலை தூக்கிப் பார்க்க வேண்டும். அவர்கள் தலை தூக்கிப் பார்ப்பதை நான் பார்க்கவேண்டும். நான் பார்த்து, உங்களைப் பார்க்க வேண்டும். நீங்கள் எல்லோரும் பார்ப்பதைப் பார்க்கவேண்டும், பார்த்துவிட்டு என்னைப் பார்க்க வேண்டும். எழுபத்தி மூன்று நாற்பத்தியேழு ஒரு நிமிஷம், தான் நிற்கும் இடத்தை மறந்து சிரித்தான். சட்டென்று வாயை மூடிக்கொண்டான். தம்பதிகள் ரஸ்தாவைத் தாண்டிப் போய்விட்டார்கள். - ஆளுல் பொன்னம்மை போட்ட திட்டமெல்லாம் நிறைவேறுவதற்கு ஐந்து ரூபாய் வேண்டும். ஐம்பது ரூபாய் செலவாகும். ஆனல் பொன்னம்மை அவனிடம் ஐந்து ரூபாய்தான் கேட்டாள். துணி மணி கடனுக வாங்கிக்கொண்டு வந்துவிட்டாள். அதை இரவோடு இரவாகத் தைக்கவும் கொடுத்துவிட்டாள். சீட்டுப் பணம் பிடித்து குழந்தைக்கு மாலை வாங்கிவிட்டாள். பால் விற்று அதையும் அடைத்து விடுவாள். பிறந்த நாளே யொட்டிய சில்லறைச் செலவுக்காகத்தான் அவள் பணம் கேட்டாள்.