பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48


அன்று சைக்கிளில் விளக்கில்லாமல் போவாரில்லை. சிறுநீர் கழிப்பதற்கு பிரசித்தமான சந்துகள் ஒன்று பாக்கி யில்லாமல் தாண்டி வந்தாகி விட்டது. சந்துக்குள் நுழை பவர்கள் கண்களுக்குத் தென்படாமல், நின்று நின்று பார்த்தாகிவிட்டது. கால் வலி எடுத்ததுதான் மிச்சம். ஒரு குழந்தைகூட ஒன்றுக்குப் போகவில்லை. -முன்பெல்லாம் நம்மவர்கள் சாதாரண மனிதர்களாக இருந்தார்கள். இப்பொழுது பிரஜைகளாகி விட்டார்கள். பொறுப்பு உணர்ச்சி கொண்ட பிரஜைகள். நமது பிரஜைகள் நீடுழி வாழ்க! எழுபத்தி மூன்று நாற்பத்தியேழு முகத்தைச் சுளித்துக் கொண்டான். மீண்டும் ஜங்ஷனிலிருந்து கிளம்பி, வடதிசை நோக்கி நடந்தான். நின்று நின்று நடந்தான். சிறிது நடந்து விட்டு நின்ருன் ; நடந்தான் ; நின்றன். இப்பொழுதும் கோபம் கோபமாக வந்தது. எதிரே வந்த டாக்சி கார்களே எல்லாம் பட் பட்டென்று கை காட்டி நிறுத்தினன். எல்லோரும் ஒழுங்காக லேசன்ஸ் வைத்திருக்கிருர்கள். ஐந்து பேர் போகவேண்டிய வண்டி யில் மூன்று பேர் போகிருர்கள். நாலு பேர் போகவேண்டிய வண்டியில் டிரைவர் மட்டும் போகிருன். -பேஷ்! இனிமேல் இந்த தேசத்தில் போலிஸ் காரர்கள் தேவையில்லே. கூலிகள் யாரையாவது அதட்டிப் பார்க்கலாம்; ஒரு வரையும் காணுேம். புது சினிமா ஆரம்பமாகிற நாள். ஒருவரையும் காணுேம் -எல்லாக் கழுதைகளும் சினிமாவில் காசைக் கரியாக்கு கிருர்கள். அந்தி மயங்குகிற சமயம் கூல்டிரிங் கடையில் ஸ்பிரிட் வியாபாரம் ஆரம்பமாகும். மதுவிலக்கு அமுலி