பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 O குதிரை நகர்ந்தது. தபால் ஆபீஸ் பக்கம் வந்தான், எழுபத்தி மூன்று நாற்பத்தியேழு. எதிர் சாரி வெற்றிலே பாக்குக் கடை பெஞ்சில் அமர்ந்தான். தொப்பியை எடுத்து மடியில் வைத்துக் கொண்டான். தலையைத் தடவி விட்டுக் கொண் டான். கையெல்லாம் ஈரமாகிவிட்டது. எரிச்சல் தாங்க முடியவில்லை. தொடை நோவும்படி நிக்கரில் பிசைந்து பிசைந்து துடைத்துக் கொண்டான். மேற்கும் கிழக்கும் பார்த்தான். அப்பொழுது தபால் நிலையத்தை நோக்கி ஒரு கனமான உருவம் வருவது தெரிந்தது. எங்கோ பார்த்த முகம் போலிருந்தது. கிருஷ்ணன் கோவில் அர்ச்சகரோ? கிருஷ்ணன் கோவில் அர்ச்சகர் தபால் ஆபீசில் நுழைந் தார். கூர்ந்து கவனித்தான் எழுபத்தி மூன்று நாற்பத்தி யேழு. அர்ச்சகர் கையில் ஒரு நீள உறை. எழுந்து பின்னுல் சென்ருன். அர்ச்சகர் தபால் பெட்டியருகே சென்று விட்டார். it so வேய் 3 * சட்டென்று திரும்பி நின்ருர். “ இங்கே வாரும்.’’

  • இ.தெ போட்டுட்டு வந்துடறேன். '
  • போடாமெ வாரும்.”

அர்ச்சகர் ஸ்தம்பித்து நின்றர்.

  • வாரும் இங்கே.-ஒரு அதட்டல்.

அர்ச்சகர் தயங்கித் தயங்கி வந்தார். நல்ல கனமான சரீரம். மொழு மொழுவென்று உடம்பு. உடம்பு பூராவும் இலேசாக எண்ணெய் தடவியதுபோல் மினுமினுப்பு. வளைகாப்புக்குக் காணும்படி, வயிறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிறுகதைக்_கோவை.pdf/56&oldid=830424" இலிருந்து மீள்விக்கப்பட்டது