பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54


"ஒரே அடியா அப்படிச் சொல்லிடப்படாது. நான் சொன்னதெல்லாம் நெஜம். கூட்டிக் கொறச்சுச் சொல்லத் தெரியாது எனக்கு. மந்திரம் சொல்ற நாக்கு இது. பொய் வராது.” சரி சரி. ஸ்டேஷனுக்குப் போவோம்.' அர்ச்சகர் எழுபத்தி மூன்று நாற்பத்தியேழின் கைகளைப் பிடித்துக் கொண்டு கெஞ்சிஞர். அவர் அடைந்த கலவரம் பேச்சில் தெரிந்தது. ஸ்பரிசத்தில் தெரிந்தது. முகத்தில் பிரேதக் களை தட்டிவிட்டது. " நான் பொய் சொல்லலெ. நான் ஒரு தப்பும் பண்ணலெ. நான் சொல்றது சத்தியம். நதிக் கிஷ்ணன் கோவில் மூல விக்கிரகம் சாட்சியாச் சொல்றேன், நான் சொல்றது பொய்யான, ஸ்வாமி சும்மாவிடாது. கண்ணெப் புடுங்கிப்புடும். கையெயும் காலையும், மடக்கிப்புடும்.” ' உடம்பெ அலட்டிக்கிடாதேயும். ஸ்டேஷனுக்கு வாரும்.’’ அர்ச்சகர் கையைப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம் பித்தான், அவன். அர்ச்சகர் மெதுவாகக் கையை இழுத்துக் கொண்டு; பின் தொடர்ந்தார். அவருக்கு உடம்பெல்லாம் கூசியது. அவமானத்தால் உள் வாங்கி நடந்தார். அவருக்குத் தெரிந்த ஆயிரமாயிரம் பேர்கள் சுற்றிச் சூழி நின்று கொண்டு வேடிக்கை பார்ப்பது போலிருந்தது. எல்லோரும் அதிசயத்தோடு பார்த்துக் கொண்டு நிற்கிரு.ர்கள் ! பஜாரைத் தாண்டித்தான் ஸ்டேஷனுக்குப் போக வேண்டும். எல்லா வியாபாரிகளையும் அவருக்குத் தெரியும். வியாபாரிகளின் ஜென்ம நகூடித்திரத்தன்று கோயிலில், பூசை செய்து பிரசாதம் கொண்டு போய்க் கொடுப்பார். எல்லோருக்கும் அவரிடத்தில் மதிப்பு. அவர்கள் முன்னல் நடந்து போகவேண்டும். எல்லோரும் கடை வாசலில் நின்று பார்ப்பார்கள்.