பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 மனுஷன் முகத்திலெ முழிக்க முடியாது. நீர் எச். ஸிட்டெ சொல்லும், இந்த ஆயுஸ் பூராவும் நதிக் கிஷ்ணனேடெ சேத்து உம்மையும் நெனச்சுப்பேன்."

  • அது சரிதான் வேய். உம்ம வயித்திலே மண்ணடிக் கணும்ங்கற ஐடியா கெடயாது எனக்கு. எச். ஸி. ஒரு மாதிரி ஆளு; பாத்துக்கிடும். ஈவு இரக்கம் அவன் போன வளியிலெ கிடையாது ; மேலும் பெரிய துட்டுப் பிடுங்கி."

‘' என்னுது ?” “ துட்டுப் பிடுங்கி. காணிக்கை வச்சாத்தான் சாமி வரம் தரும். இந்த எளவுக்காகச் சுட்டித்தான் அந்த மனுசங்கிட்டே வள்ளிச சிபாரிசுக்கு போறதில்லெ நான்.” ' என்ன கொடுக்கணும் ?” 'அஞ்சு பத்து கேப்பான்.”

  • அஞ்சா ? பத்தா ?”
  • பத்து ரூபாய்க் காசில்லாமெ ஒரு கேளெல ஒய்ப் பான ?” -

பத்து ரூபாயா !”

  • ஏன் வேய் ???
  • பத்து ரூபாய்க்கு இப்பொ நான் எங்கே போறது ?”

" வேணும்னு செய்யும். இல்லேன்ன வருது போலே பாத்துக்கிடணும்.’’ அர்ச்சகர் வாய் திறவாமல் நடந்தார். மீண்டும் எழுபத்தி மூன்று நாற்பத்தேழுதான் பேச்சை ஆரம்பித் தான். என்ன? என்ன சொல்லுதீரு?’’ 'ஊஹாம். நான் எங்கே போவேன் பத்து ரூபாய்க்கு?” கணிரென்ற குரலில் சொன்னர் அர்ச்சகர். எழுபத்தி மூன்று நாற்பத்தியேழுக்கு கோபம்தான் வந்தது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிறுகதைக்_கோவை.pdf/64&oldid=830440" இலிருந்து மீள்விக்கப்பட்டது