பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59


“ இப்பொ யாரு வேய் தரணும்னு களுத்தெப்புடிக்கா யாரோ லஞ்சம் புடுங்குதாப்லெ படுதீரெ. துரிசமா நடவும். இன்ஸ்பெக்டர், வீட்டுக்கு போகுதுக்கு முன்னடி போயுட ணும். கொஞ்சம் கஷாயம் குடிச்சாத்தான் உடம்புக்கு சரிப்பட்டு வரும் உமக்கு.” " ஒடனெ கத்திரிச்சுப் பேசறேரே.”

  • கத்திரியுமில்லெ இடுக்கியுமில்லெ, வாய் பேசாமெ நடவும்.”

சிறிது தூரம் சென்றதும் மீண்டும் பேச்சை ஆரம்பித் தான். எழுபத்திமூன்று நாற்பத்தியேழுதான் ! “ இப்பம்தான் ஞாபகம் வருது. அண்ணேக்கு டி. எஸ். பி. ஆபிஸிலெயிருந்து ஒரு கடிதாசி வந்துச்சு. டி. எஸ். பி. ஆபிஸிலேருந்து காயிதமெல்லாம் மாயமா மறஞ்சு போகு தாம். ' காக்கிச் சட்டைக்காரங்க நாந்துக்கிட்டு சாகப் படாதாங்கர தோரணையிலே எழுதியிருந்தாங்க. இப்பம் தாலா விஷயம் தெரியுது ?" " என்ன தெரியுது !” * சட், வாயெ மூடிட்டு வாரும். வாயெத் தொறந்தீர்ளு பொடதிலெ வச்சிடுவேன். ஸ்டேஷனுக்கு உள்ளே ஏத்தினம் பெறவுல்லா இருக்கு.”

  • பகவான் விட்டது வழி.” அர்ச்சகர் மெளனமாக நடந்தார். இப்பொழுது அவருக்கு சந்தேகம் வலுத்தது. எழுபத்தி மூன்று நாற்பத்தி யேழின் வியாதியை’ச் சிறுகச் சிறுகப் புரிந்துகொண்டார் அவர். சந்தேகத்தை மனதுள் ஊர்ஜிதம் செய்து கொண்டார். இப்பொழுது அவருக்குள்ளே குவிந்து கிடந்த பீதியுணர்ச்சி சிதறி ஓட ஆரம்பித்தது. உடம்பில் புது ரத்தம் பாய்ச்சியது போலிருந்தது. தலே நிமிர்ந்து நடந்தார். பார், உன்னே ஒரு கை பார்க்கிறேன்’ என்று மனதில் கருவிக்கொண்டார்.