பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68


தடவிக்கொண்டே முதுகுப்புறம் வந்ததும் சட்டென்று கையை வெளியில் எடுத்தார். ஐந்து ரூபாய் நோட்டு ! இந்தாரும். கையெ நீட்டும் ' என்ருர் அர்ச்சகர். எழுபத்திமூன்று நாற்பத்தியேழு ஒரு நிமிஷம் தயங்கிவிட்டு கையை நீட்டி வாங்கிக் கொண்டான். ' கொழந்தை பிறந்த நாளுக்கு குறை ஏற்படப்படச துன்னு தறேன்” என்ருர் அர்ச்சகர். 1 சாமீ, ரொம்ப உபகாரம், ரொம்ப உபகாரம் ” என்ருன் எழுபத்தி மூன்று நாற்பத்தியேழு. அவன் குரல் தழதழத்தது. " ஆனந்த பாஷ்பம் ஒண்ணும் வழிக்க வேண்டாம். ஒண்ணும் தேதி சம்பளம் வாங்கினதும் திருப்பித். தந்துடனும் ’’ என்ருர் அர்ச்சகர். -

  • நிச்சயமா தந்துடுதேன்.' ' கண்டிப்பாத் தந்துடனும்.” " தந்துடுதேன். ' " தரலயே எச். ஸிட்டெச் சொல்லுவேன்.” இருவரும் சிரித்துக் கொண்டார்கள். " நாளைக்கு நம்ம கோயிலுக்கு கூட்டிண்டு வாரும் கொழந்தெயெ. கண்ணம்மா வந்தா ரொம்ப சந்தோஷப் படுவன் பாலகிஷ்ணன். நானே கூடயிருந்து ஜமாய்ச்சுப் புடறேன்.”

"சரி, அங்கேயே கூட்டிட்டு வாறேன்." அப்பொ நான் வறேன். முதல் தேதி ஞாபகமிருக் கட்டும்' என்று சொல்லிக்கொண்டே இருட்டில் மறைந்தார் அர்ச்சகர். எழுபத்திமூன்று நாற்பத்தியேழு அவர் மறைவதைப் பார்த்துக்கொண்டே நின்றன்.