பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70


கரம்பைத் துண்டு நிலத்தைச் சீர்செய்து தொளி உழுது முடித்த அயர்வின் நெட்டுயிர்ப்பு அது. வானம் பார்த்த பூமி என்ருலும் ஒரு போகச் சாகுபடியாவது கிடைக்குமே.

  • சுருளாண்டி ! நீ எப்ப வந்தே ? ஆளே கண்ணுப் புறத்தாலே தட்டுப்படலேயே ?’’

' வந்து ஒரு கிளமை ஓடிப்பிடுச்சு; வெள்ளாமை அலுவல் ஆளே நெட்டி வாங்கியிருச்சுது; எங்க சேக்காளி பச்சைமலே கடுதாசி அனுப்பி யிருந்துச்சு ; ஜெயங்கொண் டத்திலிருந்து ஒடியாந்திட்டேன்!’’ " அது சரி; வாய்ச் சேதியை மறந்திட்டு, என்னமோ பேசுறேனே ?...... சுருளாண்டி, ஒனக்குச் சங்கதி காதுக்கு எட்டலேயா ? ஒன் மாமன் ஆவுடைத் தேவர் ரொம்ப செகல் தப்பிக் கெடக்குருகளாமே ?...போய் ஒரு கடுத்தம் காணப் புடாதாங்காட்டி?...ஆபத்துச் சம்பத்துக்கு ஒண்னு அரை ஒத்தாசை பண்ணுப்பா, சுருளி !’ குத்துக்கல்லென நின்ருன் சுருளாண்டி; ‘சாமியாட்டம்’ வந்தாற்போல முகம் அருள் வாங்கிப்போயிருந்தது. "பஞ்சாரம் அண்ணுச்சி, மத்தத் தாக்கல் எதுணுச்சும் இருந்தால் எங்காதிலே போடுங்க; ஒங்க வயசுக்கு மரியாதை வச்சு ஒங்களோட காலுக்குச் செருப்பாச் செய்யிறேன். ஆ,ை என் மாமன் பேச்சை ஒண்டியும் பெரிய மனசு செஞ்சு தூக்காதீக; நான் வாரேன் அடி சாயப்போவுது : ஆட்டிலே இது மாசம் !......... 祿 *,,,嶽 梁 輸 அறந்தாங்கிச் சங்கு மார்க்கு நீலச் சவுக்காரம் போட்டுத் துவைத்துக் காயவைக்கப்பட்ட சவுக்கத்தை உதறித் தோளில் உருமாலே போட்டபடி மாட்டுக் கொட்ட்டிக்குப் பக்கமாக வந்தான் சுருளாண்டி அலமேலு: உப்புப் போட்டுக் கலக்கிக் கொடுத்த ஒரு லோட்டா நீராகாரம் அவன் வயிற்றுக்கு இதமாயிருந்தது. அலஞ்சிரான் காட்டுக் காளிகோயில் உச்சிகாலப் பூஜை மணி அனற் காற்றில் ஓசை கிளப்பியது.