பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2


இப்படி எண்ணிப் பார்ப்பதற்குக்கூடக் கனகம் கூசிளுள். இன்றைக்கு வரவில்லை என்று எப்படிச் சொல்ல முடியும் ? பொழுது விடிந்ததிலிருந்து, அப்படியும் இப்படியு மாக, மணி பதினென்றைத்தானே தாண்டியிருக்கிறது ? சூரியன் மறைவதற்கே இன்னும் ஏழு மணி நேரம் இருக் கிறது. அதற்குப் பின் பன்னிரண்டு மணி நேரம் இராப் பொழுது அதற்குள் துரை வராமலா போய்விடுவான் ? அப்படி வராவிட்டால்தான் என்ன ? மறுநாள் பன்னிரண்டு மணி காலத்திற்குப் பகலும் பன்னிரண்டு மணி காலத்திற்கு இரவும் இருக்கின்றன. அதற்கு மறுநாளும் அப்படியே தான். என்னுடைய துரை என்னேப் பார்க்க வராமல் இருக்க மாட்டான். கட்டாயம் வருவான் ! என் அருமை மகளு யிற்றே! வராமல் இருப்பான ?” அந்தப் பெரிய, பழைய வீட்டில் வாசலுக்கு எதிரில் பெரிய முற்றம். தெற்குப் பார்த்த வீடு. முற்றத்தின் கிழக் கெல்ல, வீட்டின் தாய்ச்சுவர். மற்ற மூன்று பக்கங்களிலும் விசாலமான தாழ்வாரங்கள். வாசல் படிக்கட்டைத் தாண்டியதும் ஒரு இடைகழி. அதன் இருபுறமும் இரு அறைகள். இடை கழியைக் கடந்தால் தாழ்வாரத்தில் வாசஐல நோக்கி, ஒரு கை இல்லாத நாற்காலி. அதுதான் கனகத்தின் பகற்பொழுது ஸ்தானம் ! அந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டுதான் துரையைப் பற்றிய நினைவுகளில் ஈடுபடுவாள், அவள். இன்றைக்கா, நேற்றைக்கா ? இருபது வருடங்கள் உலகத்தில் வேறு எந்தத் தனி மனிதனும் இவ்வளவு கற்பனை செய்த தில்லை என்று சொல்லும் அளவுக்குக் கற்பனை செய்து பார்த் திருக்கிருள், கனகம். சென்று போன, எண்ணற்ற, எத்தனையோ நாட்கள் இருக்கட்டும்; இன்றைக்குத் துரை வந்து விடுவான் என்று நிச்சயமாக நம்பினள், கனகம். துரை இன்று கட்டாயம் வரப்போகிருன்!.முற்றத்தில் காகம் வெள்ளை எச்சம் இட்டிருக்கிறதே! என்னத் தேடிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிறுகதைக்_கோவை.pdf/8&oldid=1276054" இலிருந்து மீள்விக்கப்பட்டது