பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74


பாவம், இன்னிக்கோ நாளைக்கோ புளி குடிக்கப்போறவ... நான் பேசறதாவது ?. மாட்டேன் ...வசதியா இருந்தப்ப, மாப்பிள்ளே கண்ணுக்குத் தெரியலே ; இப்ப வேணுங்கிற மகளோட அருமைகூட அந்த நாளையிலே அந்த ஆம் ப8ளக்குப் புரியலையே!......எனக்கு வேண்டாதவங்க யார் பேச்சை யெல்லாமோ கேட்டுக் கேட்டு அம்பலக் கூத்து ஆடினரே மனுசன்!...சொத்துப் பத்து, நிலம் நீச்சு அம்பிட்டும் சொப்பனமாட்டம் பூட்டுதே!......என்னே விரோதம் பண்ணிக்கிடாம இருந்திருந்தா, ஐயாயிரம் ரூபா புரோநோட்டைக் காலாவதி போக விட்டிருப்பேன ? ஆயிரம் செலவானுலும் தாவா போட்டு ஒரு கை பார்த் திருக்க மாட்டேன ? தந்தையும் மகளும் சுருளியாண்டியின் நெஞ்சுரத்தில் பாதம் பதித்து விளையாடினர். ஹரிக்கேன் விளக்கை ஏற்றி வைத்தாள் அலமேலு. " அலமேலு......” என்று விளித்தான், உரிமை கொண்டவன். அவள் சமையற் கட்டுக்குப் போய்விட்டாள் ; மேனி நடுங்கியது. வந்த ஆத்திரத்தைப் பற்களிடைப் போட்டு நசுக்கிய வண்ணம், அங்கிருந்து அவன் வெளியேறப்போன தருணத்தில் அவனுடைய தாயும் தந்தையும் மருமகளைப் பார்த்துப்போக நுழைந்தார்கள். "வாயும் வயிறுமா இருக்கிறப்பவா அதைப்போட்டு இப்பிடி நொறுக்கோணும் ?......நாலு காசு சம்பாரிச்சிப் பிட்டா மட்டும் போதுமா?...போய் அதைச் சமாதானப் படுத்து!" என்று ஆக்கினே பிறப்பித்தார் அவனுடைய தகப்பஞர். - ஆளுல் கருமையின் சிரிப்பிலே உண்மையின் வெண்மை புலப்பட முடியாதல்லவா?