பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76


தெப்பமாக நனைந்த உடையுடன் இருளேக் கிழித்துக் கொண்டு ஒட்டமாக ஓடி வந்தான் சுருளாண்டி. சற்றுமுன் குளத்தில் விழுந்து உயிரைப் போக்கிக் கொள்ள எத்தனம் செய்த உருவத்தைக் காத்த போது, எம்பேரிலே கோவப் பட்டு இது கணக்கிலே என்ளுேட பெண்சாதியும் செஞ்சி ருந்தா என்ன ஆகிறது?’ என்று தோன்றிய ஐயமே அவனே அப்படி ஒடத் தூண்டியது. வீட்டினுள் நுழைந்து பார்த்த போது, அரவம் இல்லை. அகல் விளக்கு மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. நுழைவாசலில் பாதம் பதித்தான் அவன். "...ஸ்! அப்பா!...உங்க அந்திய காலத்திலே என் கையாலே உங்களுக்கு ஒரு பருக்கைச் சாதம்கூடக் கொடுக்கிறதுக்குப் புண்ணியம் செய்யலியே அப்பா ? நான் பெத்துப் பிளேச்சு உங்க கண்ணிலே முளிப்பேன்னு எனக்குத் தோன லியே, அப்பா!...” ஓர் அரைக்கணம் சுருளாண்டி ക്ഥrത്രങ്ങ്. பிறகு, சிலையில் மனித உணர்ச்சி ஊறியது ; பகைமை கடந்த பாசம் பிறந்தது; கண்களில் நீர் பிறந்தது. " அலமேலு, என்ன மன்னிச்சுப்பிடு. இந்தாலே நொடியிலே போய் உங்க அப்பாரு காலிலே விளுந்து, அவுங்களைக் கையோடவே அழைச்சுக்கிட்டு ஒடியா றேன்!...” என்று விம்மிஞன் அவன். அலமேலுவின் விழிகள் திறக்கவில்லை; ஆனல் விழிநீர் வழி திறந்துகொண்டது. ' அப்பா!...அப்பா!' என்று புலம் பினுள் அவள். - "மாரியாத்தா, என் பெண்சாதியையும் புள்ளையையும் காப்பாத்து, தாயே!” என்று நேந்துகொண்டு, தன் மாமனர் ஆவுடைத் தேவரை அழைத்து வரத் திரும்பினன் சுருள்ாண்டி, அதுசமயம், நாகலந்துபேர் யாரையோ சுமந்து வந்ததைக் கண்டான் அவன். அவன் காப்பாற்றி, ஆட்கள் சிலரை ஏவி வீட்டில் சேர்ப்பிக்க வேண்டிக்கொண்ட அந்த உருவத்தை ஏன் இங்கே கொண்டு வருகிருர்கள்? -