பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81


சென்ருன். அன்றைய இரவு சாப்பாட்டை முடிக்க மூன்று மணி நேரமாக அவள் பாடிப் பாடி நெஞ்சு உலர்ந்து விட்டது. ஒரு வாய்த் தண்ணிரை அருகே இருந்த குழாயை நோக்கித் தட்டுத் தடுமாறிச் சென்று குடித்து விட்டு, ஒளியை உமிழ்ந்து கொண்டிருந்த அந்தப் பிளாட் பாரத்தின் கோடியிலே மங்கிய ஒளி வீசும் இடத்தில் மரத்தின் அடியிலே அமர்ந்தாள். அதுதான் அவளுடைய இரவுப் படுக்கை இடம். அவளைப் பொறுத்தவரை அந்தப் பிளாட்பாரத்து மங்கிய விளக்கும், ஒளி வீசும் மெர்க்குரி விளக்கும் ஒன்றுதான். வெளியுலகில் மை இருளில்தான் மக்கள் வாழ்வதாக அவளுக்கு எண்ணம். ஆல்ை, இதயத்திலிருந்து வீசிக்கொண்டிருந்த மாய ஒளி ஒன்று தான் அவளே நடமாட விட்டது. அருகே நின்று கொண்டிருந்த கூட்ஸ் வண்டித் தொடரின் நடுவே புகுந்து முத்தையன் லயனேயும் தாண்டி பிளாட்பாரத்திலேறிஞன். சந்தடியின்றி அவள ருகே அவன் வந்து உட்கார்ந்தான். மூச்சுவிடும் அரவம் கூட அவளுக்குத் தெளிவாகக் கேட்குமே ! யாரது, பூங்காவனமா ?’ என்று கேட்டாள் அவள்மல்லி. முத்தையன் சிரித்தான். சிரிப்பொலி அவளது முகத்தில் சுருக்கங்களை ஏற்படுத்தியது. யாரு முத்தையகு ?’ என்று அவள் பரபரப்புடன் கேட்டாள். கண்டுகிட்டயே கணக்கா. கண்ணுதான் இல்லேன் ஞலும் உனக்கு மனசு கூடவா இல்லாமே போயிடும்?முத்தையன் அவளருகே நெருங்கி உட்கார்ந்துகொண்டு ஒரு பீடியைப் பற்றவைத்தான். அவள்-மல்லி-எழுந்தாள். - ஏன் மல்லி எழுந்திட்டே ? பீடி வாசனை சகிக்கலையா ? இதைத் தொலைச்சு முழுக முடியலையே. ஆளு. நீ மனசு வெச்சா முடியும்..” என்று வருத்தப்படுபவன்போல் நடித்தான் முத்தையன். 27-7 -