பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89


எண்ணிய முத்தையன் ஏதோ நினைவாக ரயில்வே லயனேக் கடந்தபோது, பின்புறமாக நடந்து வந்த கூட்ஸ் ஒன்று மோதவே கீழே வீழ்ந்தான். சக்கரங்கள் அவன் கால்மீது ஏறின. ரத்த வெள்ளத்தில் மிதந்த அவனே பெரிய ஆஸ்பத் திரிக்குத் தூக்கிச் சென்ருர்கள். அவனுடைய இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்டன. அவனுக்கு நினைவு வந்த போது தன் கால்கள் துண்டிக்கப்பட்டதை அறிந்தான். அவன் கண்கள் கால் போனதற்காகக் கலங்கவில்லை... அந்தப் பாட்டின் வரிகள், ‘ஆசை هr وت மோசஞ் செய்தேகுே...' எங்கிருந்தோ மல்லி பாடும் ஒலி அவன் காதுகளில் ஒலித்தது. இல்லை இல்லை மல்லி நான் மோசஞ் செய்ய வில்லை. உன்னைக் காப்பாற்ற நான் தயாராக இருந்தேனே' என்று கூவினன். வலியால் பிதற்றல் என்று ஆஸ்பத் திரியில் இருந்தவர்கள் எண்ணியிருக்கலாம். மல்லியுடன் பிறந்த அந்தச் சிசுவும் பிச்சை எடுக்கத் தொடங்கியது. குருடியும், குழந்தையும் கை நீட்டும்போது காசு போடாத அளவுக்குத் தர்மசிந்தனை இன்னும் உலகில் வற்றிப் போகவில்லே, என்ருலும் தவருகப் பேசாதவர்கள் இல்லாமல் இல்லை. குருடிக்கு ஆண் குழந்தையா?’ என்று அவர்கள் கூறிச் சிரிக்கும்போது மல்லி வருத்தப்படாம லில்லை. ' குழந்தை அவளுடையதாயிருக்காது, இரவல் குழந்தையாயிருக்கும்’ என்று பேசிக்கொள்ளும் போது மல்லி இரவல் குழந்தை இல்லை. என்னுடையது, என்னு டையது என்று கூறத் துடிப்பாள். அதைக் கூறிப் பயன்? குழந்தையின் தந்தை எங்கே? முத்தையனுக்கு நேர்ந்த விபத்து மல்லிக்குப் பல நாட்கள் கழித்தே தெரிந்தது. மிகுந்த பரபரப்படைந்தாள். எங்கிருந்தோ புதுப் பாசம் அவளே வந்து ஒட்டியது. ஆஸ் பத்திரிக்கு உடனே ஒடிப் போய்ப்பார்க்கத் துடித்தாள். தட்டுத் தடுமாறி விசாரித்துக் கொண்டு எவரெவருடைய தயவையெல்லாம் நாடி ஆஸ்பத்திரியை வந்தடைந்தாள்.