பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 | அப்படிச் சொல்லாதே முத்தையா, போனதை நெனேச்சு வருத்தப்படாதே. இதோ பார் உன் குழந்தைமல்லி இதைக் கூறும் போது வெட்கப்பட்டாள். கடபுடா சப்தத்துடன் ரயில் சென்று கொண்டிருந்தது. அதே பழைய பாடல். ஆணுல், பாடலின் புது விளக்கம் அறிந்தவர்களுக்குத் தெரியும். நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனே நட்டாற்றில் கை நழுவ விட்டேனே, ஆசை காட்டி மோசஞ் செய்தேனே அன்புடையவர்க்குத் துன்பம் செய்தேனே..." முத்தையன், மல்லிக்குத் துணையாக வழிகாட்டிக் கொண்டிருந்தான். மல்லி முத்தையனுக்கு உதவியாகத் தோள் கொடுத்து உதவிக் கொண்டிருந்தாள். இருவருக்கும் பிரியாத துணையாக அந்தச் சிசு இருந்து இள நகை புரிந்து தானம் கொடுப்போர் மனத்தைக் கவர்ந்து துணை செய்த வண்ணம் இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிறுகதைக்_கோவை.pdf/97&oldid=830515" இலிருந்து மீள்விக்கப்பட்டது