பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்லம்மாளின் மறுமணம் SAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAAAS AASAASAASAA AAAA AAAA AAAAA பூர்ணம் விசுவநாதன் டக் டக் என்ற பூட்ஸ் சத்தம், அந்த ஸ்பெஷல் வார்’டில் நிறைந்திருந்த அமைதியை மிகைப்படுத்திக் காட் டிற்று. அந்தச் சத்தம் நாலாம் நம்பர் அறையை நெருங்கிய போது செல்லம்மாளின் கட்டிலேச் சுற்றி நின்று கொண்டி ருந்த எல்லோரும் திரும்பிப் பார்த்தார்கள். டாக்டர், படுக்கையருகே சென்று ஒரு முக்காலியில் அமர்ந்து செல் லம்மாளின் உடல் நிலையைச் சோதித்துப் பார்த்து விட்டு, ஒன்றும் பேசாமல் அப்படியே கொஞ்சநேரம் உட்கார்ந்திருந்தார். பிறகு, மீண்டும் ஒரு தடவை செல்லம்மாளின் நாடியைப் பிடித்துப் பார்த்தார். அப்பு றமும் சற்று நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தார். பிறகு திடீரென்று எழுந்திருந்தார். இரண்டடி பின்னுக்கு வந்து ராமலிங்கத்தின் தோளில் லேசாகத் தட்டி, தம்முடன் வருமாறு சைகை செய்தார். ராமலிங்கம் திடுக்கிட்டவராக டிாக்டரைப் பின் தொடர்ந்தார். டாக்டர் அவரை ஓர் ஒரமாக அழைத்துச் சென்று, பூர்வ பீடிகை ஏதுமில்லாமல் சொன்னர். ' உம்முடைய மனைவிக்கு இன்னும் ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிறுகதைக்_கோவை.pdf/98&oldid=830517" இலிருந்து மீள்விக்கப்பட்டது