இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
“எல்லோரும் எங்கே புறப்பட்டுட்டிருக்கீங்க?”
மாமாவின் கேள்விக்கு கோமதி பதில் சொன்னாள்:
“இன்னிக்கு எங்க பள்ளிக்கூடத்திலே சுதந்திர தின விழா. அதுக்காக நானும் ரகுவும் போய்க் கொண்டிருக்கோம். மணியைக் கூப்பிட்டா வரமாட்டேன்’ங்கிறான். அதுக்கு வேறே ஏதேதோ காரணங்கள் சொல்றான். நீங்களாவது சொல்லி விழாவுக்கு வரச் சொல்லுங்க, மாமா.”
கோமதியைத் தொடர்ந்து ரகு பேசினான்:
“ஒரு சாக்லேட்டுக்காக நீங்க வேணும்னா விழாவுக்குப் போங்க'ன்னு கேலி பேசுறான், மாமா."
மணியின் மறுப்பு மாமாவுக்கும் விந்தையாக இருந்தது.
“ஏன்'டா, மணி! சுதந்திர தின விழா மதிப்பே ஒரு சாக்லேட் தான்’னு நினைச்சுட்டியா?”
மாமா சிரித்துக்கொண்டே கேட்டார்.
“சுதந்திர தின விழாவிலே மிட்டாய் தானே மாமா தர்றாங்க. அதைத்தான் சொன்னேன்.”