பக்கம்:சிறுவர்க்குச் சுதந்திரம்.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



15


கோமதி தன் சந்தேகத்தைப் போக்கிக் கொள்ள முயன்றாள்.

“ஆமாம், கோமதி தேசியக் கொடியை ஏற்றும்போது நாம் எழுந்து நின்று வணக்கம் செலுத்த வேண்டும். அதைப் போல தேசிய கீதம் இசைக்கப்படும்போது எல்லோரும் எழுந்து நிற்கவேண்டும். தக்கபடி வணங்கி மரியாதை செலுத்த வேண்டும். தேசிய கீதம் பாடுகிறவரோடு சேர்ந்து நாமும் பாட வேண்டும். இப்படிச் செய்ய வேண்டியது ஒவ்வொருவருடைய கடமை யாகும்.”

“அப்படீன்னா, நம்ம மணிக்கு அந்தக் கடமையுணர்ச்சி இல்லை என்று சொல்றீங்களா மாமா?”

குத்தலாகக் கேட்டான் ரகு.

மாமா சொல்வதற்கு முன்பு கோமதி பேசினாள்:

“அவனுக்கு நாட்டுப் பற்றுமில்லை; கடமை உணர்ச்சியுமில்லை. இவை இரண்டும் அவனுக்கு இருந்திருந்தா சுதந்திர தின விழாவுக்கு வர மாட்டேன் என்று சொல்வானா? சுதந்திரமா ஊர் சுற்றி விளையாடப் போறேன்’னு அடம் பிடிப்பானா?”