பக்கம்:சிறுவர்க்குச் சுதந்திரம்.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



24


நானும் காட்டில் வசிக்கிறேன். அதனால், இங்கு புல் மேய எனக்கும் உரிமை உண்டு,” என அஞ்சாமல் பதில் கூறியது.

மகிழ்ச்சியால் அங்கும் இங்கும் ஓடியது. கொழுந்தாக இருந்த பசும் புற்களை ஆர்வத்தோடு மேய்ந்தது.

மானின் வார்த்தைகள் குதிரைக்கு அறவே பிடிக்கவில்லை. அவை ஈட்டியாக அதன் மனதில் குத்தியது. இவ்வளவு பெரிய உடலைக் கொண்ட தன்னை, சின்னஞ்சிறு புள்ளிமான் எதிர்த்துப் பேசுவதா? இதை எண்ணியபோது அதன் மனம் குமுறியது. தனக்கு மாபெரும் அவமானமே ஏற்பட்டுவிட்டதாகக் கருதியது. மிகுந்த கோபத்தோடு மானை நெருங்கியது. மானைப் பார்த்து “ஏ! அற்ப மானே! எனக்குச் சொந்தமான புல்வெளியில் நுழைந்துள்ளாய். அத்துமீறி புல்லை மேய்ந்ததும் இல்லாமல், என்னையே எதிர்த்தா பேசுகிறாய்? உனக்குப் பாடம் புகட்டுகிறேன். பார்! உன்னை இங்கிருந்து விரட்டாமல் நான் விடப் போவதில்லை. இது உறுதி!” என ஆத்திரமாகச் சபதம் செய்தது. பின்னர் புல்வெளியைவிட்டு வேகமாக வெளியே எங்கோ ஒடியது.

குதிரை எங்கெங்கோ ஒடிக் களைத்தது. கடைசியாக மலையடிவாரம் வந்து நின்றது.