பக்கம்:சிறுவர்க்குச் சுதந்திரம்.pdf/28

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 அங்கே ஒரு சிறிய வீடு இருந்தது. அந்த வீட் டில் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரைப் பார்த்த போது குதிரைக்கு ஒரு யோசனை தோன்றியது. இந்த மனிதரின் உதவியைக் கொண்டு புல்வெளி யிலிருந்து புள்ளிமானை விரட்ட எண்ணியது.

காட்டுக் குதிரை வீட்டை நெருங்கியது. அந்த வீட்டுக்காரனை கவலையோடு பார்த்தது. பின், தனக்கு ஏற்பட்டுள்ள துன்பத்தை விபரமாக விளக்கிக் கூறியது. எப்படியும் தனக்குச் சொந்தமான புல்வெளியில் புகுந்து மேயும் புள்ளி மானை அங்கிருந்து விரட்டியடிக்கும்படி கேட்டுக் கொண்டது.

அந்த மனிதன் குதிரையின் துன்பத்தைப் போக்க எண்ணினான். அத்துமீறி நுழைந்து புல் வெளியில் மேயும் புள்ளிமானை விரட்டியடிக்க அந்த மனிதன் சம்மதித்தான்.

அவனுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. அவன் காட்டுக் குதிரையைப் பார்த்துக் கேட்டான்:

‘'நீ விரும்பியபடியே மானை விரட்டி விடலாம். ஆனால், மான் மிகவும் வேகமாக ஓடக் கூடியது. என்னால் அவ்வளவு வேகத்தில் ஒடி அதை விரட்ட முடியாது. ஆனால், உன்னால் மானைவிட வேகமாக ஓட முடியும். எனவே,