பக்கம்:சிறுவர்க்குச் சுதந்திரம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நூலாசிரியர்
கலைமாமணி
மணவை முஸ்தபா

சென்னை, அணணாமலைப் பல்கலைக் கழகங்களின் பட்டதாரியான கலைமாமணி மணவை முஸ்தபா சர்வதேச இதழான யுனெஸ்கோ கூரியர் தமிழ் மாதஇதழின் ஆசிரியர் ஆவார்.

இன்றைய தென்னக இலக்கியப் போக்கு முதலாக பத்து தமிழ் நூல்களை எழுதியுள்ள இவர், ஆங்கிலத்திலிருந்து எட்டு நூல்களையும் மலையாளத்திலிருந்து ஏழு நூல் களையும் தமிழில் பெயர்த்துள்ளார். இவரைத் தொகுப்பாசிரியராக் கொண்ட ஏழு தொகுப்பு நூல்களும் வெளி வந்துள்ளன. முப்பதுக்கு மேற்பட்ட வானொலி நாடகங்களையும் ஐந்து தொலைக்காட்சி நாடகங்களையும் ஏழு சிறுவர் நூல்களையும் படைத்துள்ளார்.

தென்மொழிகள் புத்தக நிறுவனத்துக்காக நாற்பத்தி மூன்று சிறுவர் நூல்களைப் பதிப்பித்துள்ளார். அவை புதினம், சிறுகதை, நாடகம், அறிவியல், சுற்றுலா பற்றிய பல்துறைப் படைப்புகளாகும். கடந்த இருபது ஆண்டுகளாக வானொலியில் சிறுவர் நிகழ்ச்சிகள் பலவற்றை, எழுதியுள்ளார். சென்னை வானொலி நிலைய சிறுவர் நாடகவிழாக்களில் இவரது நாடகங்கள் பல ஒலிபரப்பாகி, பாராட்டப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசின் திரு.வி.க. விருது பெற்றுள்ளார்.