பக்கம்:சிறுவர் இலக்கியம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

44 அடிகளாசிரியர் 35. தாத்தா சாமார்த்தியம் (இளைஞர் கூற்று) சுவை: பெருமிதம் 1. தாத்தா! தாத்தா! கதை சொல்லு தகுதி தோன்றக் கேட்கின்றோம் சிரிக்கும் கதையைச் சொன்னாலோ சிரித்து மகிழ்ந்து குதித்திடுவோம். 2. அறிவுக் கதையை நீ சொன்னால் அமைதி யாகக் கேட்டிடுவோம் பக்திக் கதையை நீ கூறின் பரமன் மேலே அன்பாவோம். 3. வீரர்க் கதையை கூறிடிலோ வீரம் கொண்டே எழுந்திடுவோம்; தேசத் தொண்டர் கதை சொன்னால் தேசத் தொண்டைச் செய்திடுவோம். 4. ஏற்ற கதையை நீ சொல்லி எங்கள் மனத்தைத் திருப்புகிறாய்; சாற்றும் கதையால் மனம்திருப்பும் சாமார்த் தியத்தை என்சொல்வோம்?