பக்கம்:சிறுவர் இலக்கியம்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________ 47 சிறுவர் இலக்கியம் 38. விசுவு என்னும் குழந்தை (தொண்டன் கூற்று) 1. குளத்துக் கரை நாவல் மரம் கொத்துக் கொத்தாய்ப் பழுத்தது; குடுகு டுண்ணுக் குழந்தைக் கூட்டம் கும்பல் கும்பலாய் எழுந்தது 2. குனிஞ்சி நிமிர்ந்து சுற்றிப் பார்த்துக் குழந்தைக் கூட்டம் நின்றது; குரங்கு மச்சான் குலுக்கிக் குலுக்கிக் கோடிப் பழத்தைத் தந்தது. 3. வேண மட்டும் தின்ற கூட்டம் வீட்டை நோக்கி நடந்தது; விசுவு என்னும் குழந்தை மட்டும் வேண்டும் பழத்தை எடுத்தது. 4. அம்மா ளுக்கும் அக்கா ளுக்கும் அவற்றைக் கொடுத்துக் களித்தது; அப்பா ருக்குங் கொடுக்கச் சொல்லி அறிவிப் பொன்றும் அளித்தது. 5. நாமே தின்று வாழ்ந்து விட்டால் நாட்டிற்குப் பயன் இல்லையே; நமது பொருளை பிறர்க்கும் கொடுத்து நலத்தைப் புரிதல் நன்மையே. --