இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
48 அடிகளாசிரியர் 39. குறும்புக்காரக் குப்பன் 1. குப்பன் என்னும் சிறுவன் குறும்பு செய்யும் ஒருவன்; சுப்பனையும் கூட்டிக் கொண்டுச் சுற்றிச் சுற்றித் திரிவான். 2. குண்டு நாய்கள் ரெண்டுகூடி குதிச்சு விளை யாடின கண்டு கொண்ட ரெண்டுபேரும் கல்லை எடுத்து வீசினர். 3. கோவம் கொண்ட ரெண்டுநாயும் குரைச்சுத் துரத்தி வந்தன குறும்பு செய்த ரெண்டுபேரும் குருடு போல ஓடினர். 4. பாவம் அங்கே சைக்களொன்று பரப ரப்பாய் வந்தது பசங்கள் ரெண்டும் சைக்கள்மேலே பார்த்தி டாமல் முட்டினர். 5. சைக்களோட்டி சைக்களோடு சாய்ந்து கீழே விழுந்திட்டான் சக்க ரத்தில் ரெண்டுபேரும் சிக்கி அடி பட்டனர். 6. குறும்பு செய்த குப்பனுக்குக் கூலி உடனே வந்தது கூடச் சேர்ந்த சுப்பனுக்கும் குறைவு இலாமல் கிடைத்தது.