பக்கம்:சிறுவர் இலக்கியம்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

_____________50 அடிகளாசிரியர்

41. எங்கள் நல்ல வீடு

(தம்பியர் கூற்று)

சுவை: உவகை

1. எங்கள் நல்ல வீட்டினுக்கே
     என்றும் முதல்வர் தாய்தந்தை;
  எங்கள் அண்ணன் அக்காவும்
     எங்கட் குதவும் நற்றுணைவர்.

2. அன்பும் அறிவும் இன்சொல்லும்
     அனைவர்க்கு அமைந்த நல்லகுணம்;
   இன்பம் அன்றி, எங்களிடம்
     என்றும் துன்பம் இருந்ததில்லை.

3. காலைப் பொழுதில் எழுந்திடுவோம்.
     கடவுளை எண்ணித் தொழுதிடுவோம்;
   வேலை பலவும் செய்திடுவோம்,
     வீணே சோம்பித் திரியோமே.

4. படிக்கும் சிறுவர் படித்திடுவார்;
     பணிகள் செய்வோர் பணிசெய்வார்
   அடித்தே வேலை யிடமாட்டார்;
     அன்பே நிறைந்த எம்தந்தை.