பக்கம்:சிறுவர் இலக்கியம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

அடிகளாசிரியர்

42. நான் என்ற சிறுவனும் பாப்பு என்கின்ற குழந்தையும்

(சிறுவன் கூற்று)

சுவை: அழுகை

1. நாயிக் குட்டியும் கண்ணுக் குட்டியும்
    நடுத் தெருவிலே குதிச்சிது;
 நானும் பாப்பும் சேர்ந்துக் கிட்டு
    நகைச்சி மகிழ்ந்து பார்த்திட்டோம்.

2. பாயும் பசுவு நாயிக் குட்டியைப்
     பாய்ந்து வந்து துரத்திச்சி;
   பயந்தி டாமல் நாயிக் குட்டியும்
     பாய்ந்து விலகிக் குரைச்சிச்சி

3. சிரிச்ச பாப்பு மிகவும் பயந்து
     சீறிச் சீறி அழுதுச்சி;
  எரிச்ச லுடனே தாயும் வந்து
     என்னை அடிச்சித் திட்டிச்சி.

4. பார்த்தி டாமல் கேட்டி டாமல்
     பாலர் தம்மை அடிப்பது,
   பாவம்! பாவம்! இதனைப் போலப்
     பழிப்பு வேறு இல்லையே.