பக்கம்:சிறுவர் இலக்கியம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________ 55 சிறுவர் இலக்கியம் 45. சின்ன குழந்தை மனம் (அறிவன் கூற்று) அறிவுரை சுவை : உவகை 1. மாடி வீட்டில் வாழ்பவரே! மனத்தில் உமக்கு மகிழ்வுண்டோ? மணலால் வீட்டைக் கட்டுகிற மகவின் மகிழ்ச்சி தனைப்பாரீர்! 2. கைக்குக் கிடைத்த கல்லடுப்பு களிமண் ணாலே பானைசட்டி வைக்கும் உணவோ நல்லமணல் வளரும் மகிழ்ச்சிக்கு அளவில்லை. 3. விருந்தை அன்பாய் அழைத்துவரும்; விரும்பி அவரோடு இருந்துண்ணும் திருந்தும் இந்த விளையாட்டால் தினமும் மகிழும் குழந்தையினம். 4. ஊக்கம் சிறிதும் குறையாமல் உழைப்பை அன்பை வளர்க்கின்ற ஆக்கம் நல்கும் விளையாட்டில் அமைந்து மகிழும் குழந்தையினம்.