பக்கம்:சிறுவர் இலக்கியம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

56 அடிகளாசிரியர் 5. வெள்ளிக் கலத்தில் உணவுண்டு விரைந்த காரில் செல்பவரே! உள்ளம் தம்மில் உமக்கமைதி உண்டோ? உண்மை யாய்உரைப்பீர்! 6. பொய்மை வெகுளி அழுக்காறு பொருந்தி நிற்கும் மனிதர்களே! மெய்மை யாக நீர்கூறும் மேவும் மகிழ்ச்சி உமக்குண்டோ? 7. கள்ளம் இன்றி அன்புமனம் கற்றா லன்றி வாழ்க்கையினில் எள்ளத் தனையும் இன்பமுண்டோ? இதனை நீவிர் அறிந்ததுண்டோ? 8. சின்ன குழந்தை மனம்போலச் சிறந்த மனத்தைப் பெற்றுவிட்டால் பொன்னும் பொருளும் உடையவரே! பொருந்தி நிற்பீர் நல்லின்பம்!