பக்கம்:சிறுவர் இலக்கியம்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

58 அடிகளாசிரியர் 47. உறவு வேண்டுமா சண்டை வேண்டுமா 1. சின்னம் சிறிய பாலர்களே சேதி ஒன்றைக் கேளுங்கள் கருத்தாய் இதனைக் கேளுங்கள் கருத்தில் வைத்துக் கொள்ளுங்கள். 2. உறவு சண்டை என்றிரண்டும் உங்கள் உளத்தில் உதிக்கிறது உறவு அதனால் இன்பம்வரும் சண்டை அதனால் துன்பம்வரும். 3.உறவு இருந்தால் அன்புவரும் சண்டை இருந்தால் வன்புவரும் உறவு இருந்தால் இன்சொல்வரும் சண்டை இருந்தால் வன்சொல்வரும். 4.உறவு இருந்தால் வாழ்வுவரும் சண்டை இருந்தால் தாழ்வுவரும் எந்த ஒன்று உங்களுக்கு ஏற்றது என்றே அறிந்துகொள்வீர்.