பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 பெற்றவர். இவரது முழுப்பெயர் ஜலாலுத்தீன் முஹம்மது அக்பர் என்பதாகும். இவர் 1542ஆம் ஆண் டில் பிறந்தார். இவருக்கு எழுதப் படிக்கத் தெரி யாது. எனினும் இவர் மிகவும் புத்திக் கூர்மை மிக்கவராக விளங்கினார். படிப்பறிவு இல்லா விட்டாலும் கேள்வி ஞானம் அதிகம் உள்ளவர். இவர் அறிஞர்களைப் பெரிதும் மதித்து ஆதரித்தார். பதின்மூன்றாம் வயதிலேயே அரச ரான இவர் கலை ஆர்வம் மிக்கவராக இருந்தார். எனவே, கலைஞர்களை ஆதரித்தார். புகழ்பெற்ற இசைக் கலைஞர் தான்சேன் இவரது அவைக் களக் கலைஞர் ஆவார். பீர்பால் எனும் சிறந்த நகைச்சுவைக் கலைஞ ரும் இவரது அவையில் இருந்தார். அக்பர் தென்னகம் தவிர்த்து இந்தியா முழுவதையும் ஆண்டார். இவர் சிறந்த போர் வீரராகவும் போர்க்கலை வல்லுநராகவும் திகழ்ந் அக்பர் தார். போரிட்டுப் பல நாடுகளை வென்றார். இவர் ஐம்பது ஆண்டு கள் நாட்டை ஆட்சி செய்தார். அப் போது மக்கள் நன்மைக்கென பல சீர்திருத்தங்களைச் செய்தார். அக்பர் இன, மொழி, நிற, சமய வேற்றுமை இல்லாமல் மக்களிடம் அன்பு காட்டினார். மக்கள் அனை வரையும் சமமாக நடத்தினார். தன் ஆட்சியில் இந்துக்களும் முஸ்லிம் களும் எவ்வித வேற்றுமையும் பாராட் டாது வாழவேண்டும் என விரும்பி னார். இதற்காக இந்து, இஸ்லாம் மற்றும் சீக்கிய சமயங்களின் சிறந்த கருத்துகளையெல்லாம் கொண்ட ஒரு புது சமயக் கொள்கையை உருவாக் கினார். அதற்கு "தீன் இலாஹி" எனப் பெயரிட்டார். இதற்கு மக்களின் ஆதரவு இல்லாததால் விரைவிலே இது மறைந்துவிட்டது. அகச் சிவப்புக் கதிர்கள்: கதிரவனின் ஒலி அலை நீளம் அதிகமான சிவப் புப் பகுதிக்கு அப்பாலும் கதிர்கள் உண்டு. இவை வெப்பம் மிகுந்தவை. பெரும் அளவில் இருப்பவை. கண் களுக்குப் புலனாகாத இக்கதிர்கள் அகச் சிவப்புக் கதிர்கள்' (Infra Red Rays) என அழைக்கப்படுகின்றன. நம் கண்களுக்கு இவை தெரியா விட்டாலும் பொருள்களுக்கு வெப்ப மூட்டுகின்றன. எனவே, இவற்றை 'வெப்ப அலைகள்'என்றும் அழைக்க லாம். வெப்பத்தை அளக்கும் கருவி யைக் கொண்டு இதன் வெப்பத்தை அளக்கலாம். சாதாரணக் கண்ணாடி கள் அகச்சிவப்புக் கதிர்களைக் கடத் துவது மிக அரிதாகும். எனவே, இதற்கென சிறப்பாகத் தயாரிக்கப் பட்ட ஒளியியல் கருவிகள் மூலம் ஒளியைக் கடத்தி ஆராய்கிறார்கள்.