பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உமறுப் புலவர் களில் நிறைய உப்பளங்கள் உள் 6T6 Jr., நம் அன்றாட வாழ்வில் உப்பு பல வழிகளில் பயன்பட்டு வருகிறது. உணவில் உப்பு சுவைகூட்டுவதோடு அவை கெடாமலும் பாதுகாக்கிறது. பனிக்கட்டிகளுக்கு மேலும் குளிரூட்ட உப்பு பயன்படுகிறது. இரசாயனப் பொருள்கள் பலவற் றைத் தயாரிக்க உப்பு உபயோகமா கிறது. மருந்துகள் தயாரிக்கவும் உப்பு பயன்படுகிறது. தொண்டை வலியோ, பல்வலியோ ஏற்பட்டால் உப்பு நீரால் வாய் கொப்பளிக்க, வலி நீங்கும். - இன்று மட்டுமல்ல பழந்தமிழர் வாழ்விலும் உப்பு வாணிகம் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது என இலக். கியங்கள் கூறுகின்றன. உப்புச் சத்தியாகிரகம்: நம் நாட்டு விடுதலைக்காக அண்ணல் காந்தியடி கள் நடத்திய போராட்டங்களுள் மிக முக்கியமானது. அன்றாட வாழ்வில் உணவுக்குப் பயன்படும் உப்புக்கு ஆங்கில அரசு வரி விதித்துச் சட்டம் இயற்றியபோது மக்கள் அவதிப்பட்ட னர். எனவே உப்புச் சத்தியாக்கிரகம் அல்லது உப்புச் சட்ட மறுப்பு இயக் கத்தைத் தொடங்கினார். மத, இன, மொழி வேறுபாடின்றி உப்பை எல் லோரும் ப யன் படு த் து வ தா ல் அனைத்து மக்களும் இதில் ஆர்வத் துடன் ஈடுபட்டனர். இதன் மூலம் ஆங்கில ஆட்சிக்கு இந்தியர்களின் ஒட்டு மொத்த எதிர்ப்புக் கிளம்பியது. சபர்மதி ஆசிரமத்திலிருந்து 385 கி.மீ. தூரத்தில் உள்ள தண்டி எனும் இடத்திற்கு சட்டத்தை மீறி உப்பு எடுக்க காந்தியடிகள் தலைமையில் 78 சத்தியாக்கிரகிகள் 30- 8-1980ജൂൺ 97 கிளம்பினர். இதில் இளைஞர் முதல் முதியோர் வரை அனைத்துத் தரப் பினரும் கலந்து கொண்டனர். நடைப்பயணம் தொடங்கிய 24 நாட்களுக்குப் பின் தண்டி கடற்கரை யை அடைந்து சட்டத்தைமீறி உப்பு எடுத்தனர். அப்போது ஆங்கில அரசு சத்தியாக்கிரகிகளை அடித்து நொறுக்கினர்; நூற்றுக்கணக்கானவர் களைக் கைது செய்தனர். இதன்பின் இப்போராட்டம் இந் தியாவெங்கும் பரவியது. தமிழ்நாட் டில் திருச்சியிலிருந்து 18-4-1980இல் ராஜாஜி தலைமையில் புறப்பட்டு வேதாரணியம் கடற்கரை சென்று சட் டத்தை மீறி உப்பு எடுத்தனர். அப் போது அவர்களைப் போலிசார் அடித்து நொறுக்கினர்; துப்பாக்கி சூடும் நடத்தி மூவரைக் கொன்றனர். இப்போராட்டம் இந்திய மக்கள் அனைவரையும் ஆங்கில ஆட்சிக்கு எதிராகத் திருப்பியது. மக்கள் உள் ளத்தில் விடுதலை வேட்கை கொழுத் துவிட்டெறியச் செய்தது. உமறுப் புலவர் பதினேழாம் நூற் றாண்டில் தமிழகத்தில் வாழ்ந்த மிகச் சிறந்த முஸ்லிம் தமிழ்ப் புலவர் உமறுப்புலவர்.இவர் 1642ஆம் ஆண் டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாகலாபுரம் என்னும் ஊரில் பிறந்தார். இவர் தந்தையார் பெயர் முகம்மது நயினார்ப் பிள்ளை என்ப தாகும். இவர் எழுதிய செந்தமிழ்க் காப்பியம் "சீறாப் புராணம் என்ப தாகும். முதுமொழிமாலை, செய்தக் காதி நொண்டி நாடகம், சீதக்காதி திருமண வாழ்த்து ஆகிய மூன்று நூல்களையும் இவர் எழுதியுள்ள தாகக் கூறப்படுகிறது.