பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98. கடிகை முத்துப் புலவர் என்பவ ரிடம் கல்வி கற்ற இவர் எட்டையபுர சமஸ்தானப் புலவராக விளங்கினார். இஸ்லாமிய நெறியை நிலை நிறுத்திய நபிகள் நாயகத்தின் வாழ்வையும் வாக்கையும் இலக்கியமாகப் பாட விரும்பினார். அப்போது இஸ்லா மியக் கல்விக் கடலாக விளங்கிய சதக் கத்துல்லா அப்பா அவர்கள் நபிகள் நாயகம் வரலாற்றை விளக்கிக் கூற இவர் இலக்கியம் படைத்தார் என்பது வரலாறு. இவர் சீறாப்புராணம் பாட உதவிய வள்ளல் அபுல் காசீம் என்ப வராவார். இவர் கொடைச் சிறப்பை சீறாவில் பல இடங்களில் புகழ்ந்து பாடியுள்ளார். 翰 சீறாப்புராணக் காப்பியம் 5028 விருத்தப் பாடல்களால் இயற்றப்பட் டது. இக்காப்பியம் விலாதத்துக்காண் டம் (இளமைக்காலம்), நுபுவத்துக் காண்டம்(இறைத்தூதர் பட்டம் பெற்ற காலம்), ஹிஜரத்துக் காண்டம் (குடி பெயர்ந்த காலம்) என மூன்று பகுதி களைக் கொண்டது. இக்காப்பியம் முழுமையடையும் முன்பே 1708ஆம் ஆண்டில் எட்டையபுரத்தில் மறை வெய்தினார். இவர் சமாதி எட்டைய புரத்தில் உள்ளது. உயர்நீதி மன்றம்: இந் தியா வில் மாநில அளவில் அமைந்துள்ள மிக உயர்ந்த நீதி மன்றமே "உயர்நீதி மன்றம் ஆகும். பஞ்சாப்,ஹரியானா, அஸ்ஸாம், நாகாலாந்து நீங்கலாக இ_ள்ள அனைத்து மாநிலங்களிலும் உயர் நீதி மன்றங்கள் உள்ளன. மாநில அளவிலான வழக்குகள் இம் மன்றங்களில் விசாரிக்கப்பட்டு நீதி வழங்கப்படுகின் றன. த மி ழ் நாடு மாநில உயர்நீதி மன்றம் தலைநக ரான சென்னையில் அமைந்துள்ளது. இத்தகைய உயர்நீதி மன்றங்கள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உயிர் அணு அமைக்கப்பட்டன. 1861ஆம் ஆண் டில் முதல்முறையாக சென்னை, கல் கத்தா, பம்பாய் ஆகிய நகரங்களில் உயர்நீதி மன்றங்கள் உருவாக்கப் பட்டன. பஞ்சாப், ஹரியான மாநிலங் களுக்கு பஞ்சாப் உயர்நீதி மன்றமும் அஸ்ஸாம் உயர்நீதி மன்றமும் இணைப்பு மன்றங்களாக அமைந் துள்ளன. - ஒவ்வொரு உயர்நீதி மன்றமும் ஒரு தலைமை நீதிபதியைக் கொண்டிருக் கும். வழக்குகளின் அளவுக்கேற்ப மற்ற நீதிபதிகள் இடம் பெறுவர். நீதிபதிகளை குடியரசுத் தலைவர் நியமிப்பார். பத்து ஆண்டுகள் நீதித் துறையில் பணிசெய்தவர்களாக அல் லது பத்து ஆண்டுகள் நீதி மன்றங் களில் வழக்குரைஞர்களாக இருக்க வே ண் டு ம். இத்தகையவர்களே உயர்நீதி மன்ற நீதிபதிகளாக நிய மிக்கத் தகுதிபடைத்தவர்கள். இவர் கள் 62 வயது வரை பணியாற்றலாம். இவர்களுக்கான ஊதியங்கள் அர சமைப்புச் சட்டத்தில் விதித்துள்ள வாறு வழங்கப்படும். இவர்கள் தேவைப்படும்போது குடியரசுத் தலை வரால் மாநிலத்திற்கு மாநிலம் மாற் றப் படுவார்கள். உயர்நீதி மன்றத்திற்கு தலைமை நீதிபதி இல்லாதபோது இடைக்கால ஏற்பாடாக, அதே நீதிமன்ற நீதிபதி ஒருவரை தற்காலிகத் தலைமை நீதி பதியாகக் குடியரசுத் தலைவர் நியமிப் பார். உயர்நீதி மன்றங்களுக்காக அதி கார வரைமுறைகள் அரசமைப்புச் சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளன. உயிர் அணு உயிர் வாழ்வதற்கு ஆதாரமாக இவை அமைந்திருப்ப