பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 பட்ட சிலையாகும். அச்சிலையின் உயரம் 45 அடியாகும். அதன்ஆடை முழுவதும் தங்கத் தகட்டால் ஆனது; உடல் முழுவதும் தந்தத்தால் இழைக் கப்பட்டது.அழகிய கண்கள் உயர்ந்த இரத்தினங்களால் பதிக்கப்பட்டிருந் தது. சுமார் 2,500 ஆண்டுகட்கு முன்பு உருவாக்கப்பட்ட இச்சிலை சில நூறு ஆண்டுகளுக்குள் அழிந்து விட்டது. 4. டயானா caris; இது துருக்கி பில் உள்ள யூபிசஸ் எனுமிடத்தில் 2,250 ஆண்டுகட்கு முன்பு 60 அடி தூண்கள் மீது சலவைக் கல்லால் டயானா தேவனுக்குக் கட்டப்பட்ட கோயில்.அதில் புகழ்பெற்ற கிரேக்கச் சிற்பிகள் பலர் செய்த சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. கி.பி. 262இல் படையெடுத்து வந்த காத்தியர்களால் இக்கோயில் அழிக்கப்பட்டது. அதன் சிதைவுப்பகுதிகள் இன்னும் பிரிட்டீஷ் அரும்பொருட் காட்சியகத்தில் வைக் கப்பட்டுள்ளன, 5. மா சோலஸ் மன்னன் கல்லறை: இது ஆசியா மைனரில் காரியா எனும் பகுதியை ஆண்டுவந்த மாசோலஸ் மன்னன் இறந்ததும் அவன் மனைவி ஆர்ட்டிமீசியா, ஹாலி கார்னஸ் எனு மிடத்தில் மாபெரும் கல்லறையொன் றைக் கட்டினாள்.அதன் உயரம் 100 அடிகளாகும். அதன் உச்சியில் அர சனும் அரசியும் பூட்டிய இரதத்தில் ஏ றிய ம ர் ந் த ப டி சிலையொன்று அமைக்கப்பட்டிருந்தது. பல நூறு ஆண்டுகள் நிலைபெற்றிருந்த அந்தச் சிலை பூகம்பமொன்றில் சிதிலமடைந் தது. அதன் சிதைந்த பகுதிகள் சில பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் இன் றும் வைக்கப்பட்டுள்ளன. 6. ரோட்ஸ் சிலை: ஈஜியன் கடற் பகுதியில் உள்ள ரோட்ஸ் தீவில் ஹீலியஸ் எனும் சூரியக் கடவுளுக் உலகப் போர்கள் கென வடிக்கப்பட்ட மாபெரும் சிலை யாகும். முழுவதும் வெண்கலத்தா லான இதன் உயரம் 100 அடியாகும். கி.மு. 280இல் அமைக்கப்பட்ட இச் சிலை துறைமுகத்தின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்ததாகவும் அதன் இரு கால்களுக்கும் இடையில் கப்பல் கள் சென்று வந்ததாகவும் கூறப்படு கிறது. இது 56 ஆண்டுகள் கலங் கரை விளக்கமாய் பயன்பட்டு வந்த தாகவும் கி.மு. 224இல் பூகம்பத்தால் அழிந்துபோனதாகவும் கூறப்படு கிறது. 7. அலெக்சாண்டிரியா கலங்கரை விளக்கம்:எகிப்தில் ஒரு பகுதித்தீவான பாஹோவில் கி. மு. 280 இல் இரண் டாம் தாலமி மிகப் பெரும் கலங்கரை விளக்கம் ஒன்றைக் கட்டினார்.அதன் உயரம் 100 அடி. அதன் பரப்பும் 100 சதுர அடியாகும். அதன் உச்சிப் பகுதியில் தீ எரிந்து வரும் கப்பல் களுக்கு வழிகாட்டிக்கொண்டிருக்கும்." 1,500 ஆண்டுக் காலம் நீடித்த இக் கலங்கரை விளக்கம் பூகம்பமொன் றால் அழிந்துவிட்டது. உலகப் போர்கள்: கடந்த எண்பது ஆண்டுகளில் உலகளாவிய முறை யில் இரண்டு பெரும் போர்கள் நடந்து முடிந்துள்ளன. இப்போர் களில் நேரடியாகவோ, மறைமுக மாகவோ உலக நாடுகள் பலவும் பங்கேற்றதால் இப்போர்கள் உலகப் போர்கள்’ எனும் பெயரை ப் பெற்றன. முதல் உலகப் போர் 1914 முதல் 1918 வரையிலும் இரண்டா வது உலகப் போர் 1989 முதல் 1945 வரையிலும் நடைபெற்றன. முதல் உலகப் போர்: இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளைப் போன்று ஜெர் மனியும் தம் மக்களை வெளி நாடு களில் குடியேற்றி, காலனி ஆதிக்கம் பெற விரும்பியது. அதன் மூலம்