பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 உலோகங்களே மிக அதிகமாகும். உலோகங்கள் எவை எனக் கண்டறி வது சற்று கடினமே. ஆயினும் பள பளப்பான தோற்றம், தகடாகும் தன்மை, மின்சாரம், வெப்பம் ஆகிய வற்றைக் கடத்தும் தன்மை இவற் றைக் கொண்டு உலோகங்களை இனம் காண முடியும். உலோகங்களில் நூற்றுக்கு மேற் பட்டவை கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுள் மிகமுக்கியமானது இரும்பு. கறைபடியாத உலோகமாகிய குரோ மியம், பல்வேறு துறைகட்கு இன்றி யமையாது பயன்படும் நிக்கல், சுத்தப் படுத்தும் உலோகங்களான மாங் கனிஷின் வெனேடியம்,கனமற்ற அலு மினியம்,மக்னீஷியம், வெப்பத்தையும் மின்சாரத்தையும் எளிதாக கடத்த வல்ல செம்பு, அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படும் வெள்ளியம்,துத்த நாகம், ஈயம், ஆற்றல் (சக்தி) அளிக் கும் யுரேனியம், புளுடோனியம், தோரியம் மற்றும் நகை செய்யப் பயன்படும் வெள்ளி, தங்கம், பிளாட் டினம் ஆகியவை முக்கிய உலோகங் களாகும். பாதரசம் திரவ நிலையில் கிடைக்கும் உலோகமாகும். தங்கம், செம்பு போன்ற ஒரு சில உலோகங்களைத் தவிர மற்றவற் நிற்கு நிறம் இல்லை. உலோகங்கள் சுத்தியல் போன்ற கனமான பொரு ளால் அடிக்கும்போது விரிந்து கொடுக்கும். இத்தன்மை இதற்கு இருப்பதால் நமக்கு வேண்டிய வடி வில் உலோகங்களை அடித்து உரு மாற்றி உபயோகிக்க இயலுகிறது. உலோகங்களில் பெரும்பாலானவை நீரை விட கனமானவை. நீரில் மூழ்கக் கூடியவை. ஆனால் சோடி யம், பொட்டாசியம், ஹீலியம் போன்ற உலோகங்கள் நீரைவிட கனம் உறைபனி குறைந்தவை. இவற்றை நீரில் போட்டால் மிதக்கும். பெரும்பாலான உ லோ கங்க ள் வெப்பத்தால் விரிவடையும், குளிர வைத்தால் சுருங்கும். ஆனால், ஆண்டிமனி என்ற உலோகம் குளிர வைத்தால் விரிவடையும். எல்லாவகையான உலோகங்களும் பூமிக்குள்ளிருந்தே கிடைக்கின்றன. அவை கந்தகம், ஆக்சிஜன் கலந்த தாது எனும் கூட்டுப் பொருளாகவே கிடைக்கின்றன. இவற்றைச் சுத்தி கரித்து உலோகங்கள் தனியே பிரிக் கப்படுகின்றன. நகைகளும் நாணயங்களும் தங்கம், வெள்ளி, பிளாட்டினம்,நிக்கல், செம்பு ஆகியவைகளைக் கொண்டு செய்யப் படுகின்றன. இயந்திரக் கருவிகளும், ஆயுதங்களும் இரும்பால் உருவாக் கப்படுகின்றன. செம்பும் அலுமினிய மும் பாத்திரங்கள் செய்யப் பயன்படு கின்றன. தோரியம், யுரேனியம் போன்ற உலோகங்கள் அணுகுண்டு போன்றவை செய்யப் பயன்படுகின் றன. உறைபனி: டிசம்பர், ஜ ன வ ரி மாதங்களில் குளிர் கடுமையாக இருக் கும். இன்னும் உயரமான மலைப் பிரதேசங்களில் மிகமிகக் கடுமையாக பனி பெய்யும். அங்குச் சில சமயங் களில் தரையிலும் செடி கொடிகளின் மீதும் வெண்மை நிற பணி படிந்திருக் கும். இவை உப்பு அல்லது பஞ்சு படிந்திருப்பதுபோல் தோற்றமளிக் கும் இதையே உறைபனி என் கிறோம். இது எவ்வாறு உருவாகிறது? நம் மைச்சுற்றி உள்ள காற்றில் நீராவி கலந்துள்ளது. இரவில் அவை