பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து டது. அனைத்து முயற்சிகளும் தோல் வியையே தழுவின. சிலர் உயிரையும் இழந்தனர். 1958ஆம் ஆண்டில் ஆங்கில தள பதி ஹன்ட் என்பார் தலைமையில் ஒரு குழு புறப்பட்டு எவரெஸ்ட் சிக ரம் ஏற முயன்றது. இக்குழுவினர் நவீன சுவாசக் கருவிகளையும் பிற உபகரணங்களையும் கொண்டு சென் றனர். மலையேறுவதில் போதிய அனுபவம் பெற்ற டென்சிங் என்பவ ரும் நியூசிலாந்து நாட்டவரான எட் மண்ட் ஹில்லரி என்பாரும் அல் வாண்டு மே 29ஆம் நாள் எவரெஸ்ட் சிகரத்தை எட்டினர். உலகின் மிக உயர்ந்த சிகரம் முதன் முறையாக வெற்றி கொள்ளப்பட்டது. அதன்பின் 1956ஆம் ஆண்டு சு விட் சர் லா ந் துக் குழுவினரும் 1962ஆம் ஆண்டு அமெரிக்கரும் எவ ரெஸ்ட் சிகரம் எட்டினர். 1963ஆம் ஆண்டில் கோஹ்லி என்பார் தலை மையில் சென்ற இந்தியக் குழுவினர் இச்சிகரமேறி வெற்றிக் கொடி நாட்டி னர். 1970இல் ஜப்பானியக் குழுவும் இச்சிகரம் ஏறுவதில் வெற்றிபெற்றது. இந்த ஜப்பானிய மலையேறும் குழு வில் ஒரு பெண்மணியும் இடம் பெற்றி ருந்தது குறிப்பிடத்தக்கதாகும். எழுத்து: ஆதிகால மனிதனுக்கு எழுதவோ படிக்கவோ தெரியாது. பட எழுத்து எனவே, ஏதாவது ஒன்றை மற்ற வர்க்கு உணர்த்த விரும்பியபோது 115 அதைப் படமாக வரைந்து உணர்த்தி னார்கள். சான்றாக, படகைக் குறிப் பிட படகுபோல் வரைந்து காட்டி னார்கள். படகில் ஐந்து பேர் சென் றார்கள் என்பதைக் குறிக்க படகு படத்தில் ஐந்து கோடுகளை வரைந்து காட்டினார்கள். அதே போல் நாளைக் குறிக்க சூரியன் போன்று வரைந்து காட்டினார்கள். மூன்று நாள் என்பதை மூன்று சூரி யன்களை வரைந்து காட்டினார்கள். இவ்வாறு படங்கள் மூலமாக எழுத்து முறை உருவானதால் இது பட எழுத் துகள்’ என அழைக்கப்பட்டன. இந்த பட எழுத்து முறை பழங்கால 丽/a端 எகிப்திய பட எழுத்து எகிப்தில் இருந்தது. அக்கால மன்னர் களின் கல்லறைகளில் இன்றும் பட எழுத்துகளைக் காண முடிகிறது. பட எழுத்துகளிலிருந்து குறி எழுத்துமுறை உருவாயிற்று. ஒரு பொருள் படமாக வரையப்படாமல் குறிமூலம் உணர்த்தப்பட்டது. இத்த கைய குறி எழுத்துகள் உளி வெட் டுக்கள் போல் தோற்றமளித்ததால் எழுத்துகள் அவை உளிவெட்டு’ என்றே அழைக்கப்பட்டன. பாபி லோனியரும் அசிரியரும் சீனரும் உளிவெட்டு எழுத்துகளாகிய குறி 、舟 7舟 語 சினக் குறி எழுத்து எழுத்து முறைகளையே கையாண் டனர். இவ்வகை குறி எழுத்துக்கள் 50,000க்கு மேல் சீன மொழியில் உருவாக்கப்பட்டன. குறி எழுத்துகளை எழுதுவதும் கற்பதும் மிகக் கடினமாகும். எனவே,