பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 மூன்றாவதாக விளங்கும் 'சீவக சிந்தாமணி சிவக மன்னனின் வாழ்க்கையை விவரிப்பதால் இப் பெயர் பெற்றது. இக்காப்பியத்தை இயற்றியவர் திருத்தக்க தேவர் ஆவார். இவர் சமன சமயத்தைச் சார்ந்தவர். இக்காப்பியம் சமண சமயக் காப்பியமாகும். வளையாபதி காப்பியம் முழுமை யாகக் கிடைக்கவில்லை. இதை இயற்றிய புலவர் பெயரும் தெரிய, வில்லை. இக்காப்பியப் பாடல் வரி களில் ஒருசில வேறு இலக்கிய உரைகளில் மேற்கோளாகப் பயன் படுத்தப்பட்டுள்ளன. இது ஒே பெளத்தக் காப்பியமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஐந்தாவது காப்பியமாக அமைந் துள்ள குண்டலகேசியும் முழுமையா கக் கிடைக்கவில்லை. சமண சமயக் காப்பியமாகக் கருதப்படும் இந்த இலக்கியத்தின் கதாநாயகி குண்டல கேசி என்பவள் ஆவாள். வணிக குலப் பெண்ணான இவளது கூந்தல் உருண்டு சுருண்டு இருந்ததனால் "குண்டலகேசி எனப் பெயர் பெற் ДDöl ஐன்ஸ்டின், ஆல்பர்ட் இயற்பியல் துறையில் மாபெரும் வளர்ச்சிக்கு வழியமைத்த அறிவியலாளர். மாபெ ரும் கணித மேதையான ஐன்ஸ்டீன் ஜெர்மானியில் உல்ம் எனுமிடத்தில் பிறந்தார். முனிக்கிலும் பின்னர் ஸ்விட்சர்லாந்திலும் கல்வி பயின்று அறிவியல் மேதையானார். இவரது இயற்பியல் ஆய்வுக் கட் டுரைகள் மற்ற விஞ்ஞானிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்தன. இவர் தம் ஆய்வின் திரட்சியாக சார்புக் கொள்கையை 1919ஆம் ஆண்டில் வெளியிட்டார். இக்கொள் ஒட்டுண்ணி கையின் சிறப்பைப் பாராட்டி இவ ருக்கு உலகப் பரிசான நோபல் பரிசு 1921இல் வழங்கப்பட்டது. ஆல பாட ஐன்ஸ்டீன் ஒரு பொருளின் எடைக்கும் அப் பொருளின் சக்திக்கும் இடையே யுள்ள தொடர்பை விளக்குவதே சார்புக் கொள்கையாகும். இக்கொள் கையின் அடிப்படையில்தான் அணு குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. நீண்டகாலம் ஜெர்மனியில் உள்ள பெர்லின் இயற்பியல் ஆய்வுக் கூடத் தலைவராக விளங்கிய இவர், இரண் டாம் உலகப் போரின்போது, இட் லரின் கொடுமைக்குப் பயந்து அமெ ரிக்கா சென்று அங்கேயே அவர் மறைவெய்தினார். அறிவியல் மேதையாகத் திகழ்ந்த போதிலும் நல்ல கலை உணர்ச்சி உள்ளவர். அண்ணல் காந்தியடிகள் மீது மிகுந்த அன்புள்ளவராக விளங் கினார். - ஒட்டுண்ணி: ஒர் உயிரினம் மற் றொரு உயிரினத்தின் உடலோடு ஒட்டிக் கொண்டு, உட்சென்றோ