பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 கிடைக்கின்றன. இரும்பை உருக்கும் இந்துஸ்தான் இரும்பு எஃகு ஆலை ரூர்கேலா எனுமிடத்தில் உள்ளது. இது இந்தியாவிலுள்ள பெரிய இரும்பு ஆலைகளுள் ஒன்றாகும்.இம்மாநிலத் தின் கிழக்கேயுள்ள கடற்கரைப் பகுதி யில் மீன் பிடிக்கப்படுகிறது. இக் கடற்கரையை ஒட்டி சில்கா என்ற பெரிய ஏரி இருக்கிறது. இதிலும் மீன் மிகுதியாகப் பிடிக்கப்படுகிறது. இம்மாநிலத்தில் உள்ள பூரி, புவ னேசுவர் ஆகியன புண்ணிய நகரங் களாகும். இம் மாநிலத்தில் கோனார்க் எனுமிடத்தில் உள்ள சூரியக்கோயில் சிற்பச் சிறப்பு மிக்கதாகும். ஒலிம்பிக் விளையாட்டு: ஒலிம்பிக் விளையாட்டுகள் முதன் முதலாகக் கிரேக்க நாட்டில் தோன்றியது. சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு ஒலிம் பியா எனுமிடத்தில் ஜுஸ் தேவதைக் காக நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை விழாவெடுப்பது வழக்கம். அவ் விழாவின்போது பலவகைப் போட்டி களை நடத்தி பரிசு தருவார்கள். இவ்வாறு தோன்றியதுதான் ஒலிம் பிக் விளையாட்டுகள். ஒலிம்பிக் விழாவின்போது முதல் நாள், இறைவணக்கமும் பலியும் நடக் கும். மற்ற நாட்களெல்லாம் போட்டிப் பந்தயங்களே நடக்கும்.ஆரம்பகாலத் தில் ஒட்டப்பந்தயப் போட்டி மட்டும்' நடந்தது. பின்னர் மல்யுத்தம், குத்துச் சண்டை எனப் போட்டிகள்பெருகின. இப்போட்டிகளில் பெண்கள் பங்கேற் பதில்லை. போட்டியில் வெற்றி பெறும் வீரர்கள் ஆலிவ் மரப் பூக் கொத்தால்முடிசூட்டிப்போற்றப்பட்ட னர்.அவர்கள் நாட்டோராலும் புலவர் களாலும் புகழப்பட்டனர். இவ்விழா கி.மு. எட்டாம் நூற்றாண்டு முதல் 394 வரை தொடர்ந்து சிறப்பாக நடை ஒலிம்பிக் விளையாட்டு பெற்றது. பின்னர் ரோம் மன்னரால் தடை செய்யப்பட்ட இவ்விழா 1,500 ஆண்டுகளாக நடைபெறா மலே போயிற்று. 1878ஆம் ஆண்டு தொல்பொருள் ஆய்வாளர்களால் பழைய ஒலிம்பிக் விளையாட்டுகள் தொடங்கப்பட வேண்டும் என்ற ஆர்வம் இயக்கமாக மாறியது. 1894இல் இதற்கெனகூடிய சர்வதேச மாநாட்டில் ஒலிம்பிக் விளையாட்டுக்குழு உருவாக்கப்பட் டது. இதன் முயற்சியால் முதல் ஒலிம் பிக் விளையாட்டு கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் நகரில் 1896 இல் நடை பெற்றது. அது முதற்கொண்டு உல கின் பல்வேறு நாடுகளில் நான் காண்டுகளுக்கு ஒரு முறையாக நடை பெற்று வருகிறது. முதலாம் இரண் டாம் உலகப்போர் சமயங்களில் இப் போட்டிகள் நடைபெறவில்லை. ஒலிம்பிக் விளையாட்டுகளை நடத் துவதற்கென்று சர்வதேச அமைப்பு ஒன்று உள்ளது. ஒவ்வொரு நாடும் இதன் உறுப்பு நாடுகளாகும். ஒவ் வொரு நாட்டிற்கும் தனித்தனி தேசிய ஒலிம்பிக் குழு உண்டு. இவ்வி ரண்டும் இணைந்தே ஒவ்வொரு நாட்டிலும் ஒலிம்பிக் விளையாட்டு களை நடத்துகின்றன ஒலிம்பிக் விளையாட்டுகளில் பங் கே ற்கு ம் விளையாட்டு வீரர்களை அந்தந்த நாட்டு தேசியக் குழுக்களே தேர்ந் தெடுத்து அனுப்புகின்றன. இக்கால ஒலிம்பிக் விளையாட்டு களில் அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு விளையாட்டுகள் ஒட்டம் முதல் கிரிக் கெட் ஈராக நடைபெறுகின்றன. 1928ஆம் ஆண்டு முதல் பெண் களுக்கென்றும் சில போட்டிகள் நடத் தப்படுகின்றன. ஒலிம்பிக் விளையாட் டில் கலந்து கொள்வோர் நாடு, இன,