பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணவாய் எந்திரங்கள் மூலம் எல்லாவிதக் கண் ணாடிகளும் செய்யப்படுகின்றன. கணவாய் நீண்ட மலைகள் அல் லது மலைத்தொடர்களுக்கு இடையே பெரும் பள்ளத்தாக்குகள் இருக்கும். இவை இயற்கையாகவும் ஆறுகளின் ஒட்டம் அல்லது பணியாறு போன்ற வற்றால் உருவாவதும் உண்டு.இவை குறுகலாகவும், வளைந்து வளைந்து செல்லும் வழியைக் கொண்டிருக்கும். இமயமலைத் தொடரின் வடமேற் குப் பகுதியில் புகழ்பெற்ற இரண்டு கணவாய்கள் உள்ளன.அவை கைபர் கணவாய், போலன் கணவாய் என்று அழைக்கப்படுகிறது. பலநூறு ஆண்டு கட்கு முன்பிருந்தே வேற்று நிலப் பகுதியைச் சேர்ந்த மக்கள் இக்கண வாய்களின் வழியே இந்தியாவுக்கு வந்தனர். அயல்நாட்டு மன்னர்களின் படையெடுப்பும் இக்கணவாய்கள் மூலமே நடைபெற்றன. மேற்குத் தொடர்ச்சி மலையிலும் சில கணவாய்கள் உள்ளன. அவை பாலக்காட்டுக் கணவாய், ஆசனூர் கணவாய், கசலட்டிக்கணவாய் முதலி யனவாகும். இவை கேரளத்திற்கும் தமிழ்நாட்டுக்குமிடையே உள்ளன. இவற்றின் மூலம் தரைப் போக்கு வரத்து நடைபெறுகிறது. கிழக்குத் தொடர்ச்சி மலையில் செங்கம் கண வாய் உள்ளது. கணிப்பொறி. இது மின்னாற்றலால் இயங்கும் கணிப்பொறி எந்திரமாகும், இது பலமணி நேரங்கள் போட வேண்டிய கணக்குகளை ஒரு சில விநாடிகளில் போட்டுவிடும் ஆற்றல் பெற்றது. கணிப்பொறிகளில் சாதா ரணமாக இருவகைகள் உள்ளன. கணக்குப் பொறி Machine) stn rGih. முதல் 6) 16δ) 35 (Calculating 129 இதனை முதன்முதலாகக் கண்டறிந்த வர் ஃபிரெஞ்சு நாட்டவரான பிளெஸ் பாஸ்கல் எனும் கணிதமேதை ஆவர். இவர் 1642இல் தான் கண்டுபிடித்த இயந்திர மூலம் கூட்டல் கணக்கு களைச் செய்யலானார். அதன்பின் கூட்டல்,கழித்தல், வகுத்தல், பெருக் கல் ஆகிய கணக்குகளைப் போட வல்ல பொறி 1889ஆம் ஆண்டில் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டது. அதன்பின் வர்க்க மூலங்கள் சதவீதங் களைக் கணக்கிடும் கருவிகளும் பயன்பாட்டுக்கு வந்தன. ஆரம்ப காலத்தில் இக்கருவிகள் உருவில் பெரியனவாக இருந்தன. ஆனால் இன்று இவை தீப்பெட்டி, அளவில் வெளிவந்துள்ளன. பொத்' தான் மின்கலத்தாலும் சூரிய ஆற்ற லாலும் இயங்குகின்றன. விளக்கு வெளிச்சத்தால் கிடைக்கும் சிறிதளவு சக்தியைக் கொண்டு இயங்கவல்ல காகித அட்டை கணமே உள்ள கணக்குப் பொறிகளும் கண்டறியப் பட்டுள்ளன. இரண்டாவது வகை கணிப்பொறி (Computer) ஆகும். கணிப்பொறி ஒரு அறை அளவு உள்ள மிகப் பெரும் கணிப்பொறி முதல் சிறு வானொலிப் பெட்டி அளவுள்ளவை வரை பல அளவுகளில் கிடைக்கின் றன. இவை ஒருவர் பல ஆண்டுகள்