பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலங்கரை விளக்கம் கலங்கரை விளக்கம்: பண்டைக் காலம் முதலே கடலில் கப்பல் பய ணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடுக்கடலில் கரை தெரியாமல் கப்பல் ம லு மி திகைக்கும் போது கரை இருக்கும் இடத்தைத் தெரிவிப்பதே கலங்கரை விளக்கம். அக்காலத்தில் கடற்கரையில் உள்ள உயர்ந்தோங்கிய பாறை மீதோ அல் லது உயரமாக நாட்டப்பட்ட தூண் கிளின் உச்சியில் நெருப்புப் ப்தங் | களை வைத்து கரை இருக்கும் இடத் தைப் புலப்படுத்துவார்கள். இன்று விட்டுவிட்டுப் பிரகாசமாக வெளிச்சம் காட்டும் மின்விளக்குகளால் கரை இருக்கும் இடத்தை உணர்த்துகிறார் கள். உலகெங்கும் உள்ள துறை முகங்களுக்கு அருகே இத்தகைய கலங்கரை விளக்கங்கள் அமைக்கப் பட்டுள்ளன. மிகப்பழங்காலத்திலேயேதமிழ்நாட் டுக் கடற்கரைத் துறைமுகப்பட்டினங் களில் இத்தகைய கலங்கரை விளக் கங்கள் அமைக்கப்பட்டிருந்ததை இலக்கியங்களும் வரலாறுகளும் கூறு கின்றன. இன்றும் மாமல்லபுரத்தில் அத்தகைய பழைய கலங்கரை விளக் கம் ப்ாறை முகட்டில் அமைந்திருப்ப தைக் காணலாம். கி.மு. 280இல் அலெக்சாண்டிரியா துறைமுகத்தில் அமைந்திருந்த கலங்கரை விளக்கம் உலக அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. சென்னைக் கடற்கரையில் அமைந் துள்ள கலங்கரை விளக்கிலிருந்து வெளிச்சம் விட்டுவிட்டு வருவதைக் காணலாம். இதற்குக் காரணம் மின் விளக்கை லென்சுகள் சுற்றிவரும் போது விளக்குக்கு நேராக வரும் சமயத்தில் ப்ேரொளி வெளிப்படு கிறது. விளக்கை லென்சுகள் கடந்த பின்னர் ஒளி நின்றுவிடுகிறது. மீண் 185 டும் விளக்குக்கு நேராக வரும்போது பேரொளி வெளிப்படுகிறது. கலங்கரை விளக்கம் . கலங்கரை விளக்கிலிருந்து வெளிப் படும் ஒளி சுமார் 80 கி.மீ. தூரம் வரை தெரியும். பனிமூட்டம் மேகம் கவிந்திருக்கும்போது கம்பியில்லா தந்தி வாயிலாக கலங்கரை விளக்க அலுவலகத்திலிருந்து .ெ ச ய் தி அனுப்பி கரை இருக்கும் இடத்தைத் தெரிவிப்பார்கள். சிலசமயம் சங் கொலி எழுப்புவதும் உண்டு. கரையைத் தெரிவிப்பதற்கு மட்டு மல்லாது நடுக்கடலில் பாறைப் பகுதி கள் இருப்பின் அதனைத் தெரிவிக்க வும் அப்பகுதிகளில் கலங்கரை விளக் கங்களை அமைப்பார்கள். சில சமயம் கலங்கரை விளக்கத்தைக் கப்பல்மேல் தளத்திலேயே அமைப்பதும் உண்டு.

  1. to £,

மிக ஆற்றல் வாய்ந்த கலங்கரை விளக்கம் பிரான்சில் உள்ள, வெதெ