பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 ஷாண்ட் கலங்கரை விளக்கம் ஆகும். 50கோடி கேண்டில் திறன் கொண் டது. உலகிலேயே உயரமான கலங் கரை விளக்கம் ஜப்பானில் உள்ள யோகோஹாமா கலங்கரை விளக்க மாகும். இதன் உயரம் 348 அடியா கும். இதன் ஒளித்திறன் 6 லட்சம் கேண்டில்களாகும். கலியாணசுந்தரனார், திரு.வி.க : இவர் தமிழ்த் தென்றல் திரு. வி.க.' எனத் தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் ஆவார். இவர் திருவாரூரைச் சேர்ந்த விருத்தாசல முதலியார்க்கும், சின்னம்மாவுக்கும் மகனாக அண்ணா.செங்கை மாவட் டத்திலுள்ள துள்ளம் எனும் ஊரில் 26-8-1888ஆம் ஆண்டில் பிறந்தார். திருவாரூர் வி. கலியாணசுந்தரம் என் பதன் சுருக்கமே திரு. வி. க. என்ப தாகும். - ஆழ்ந்த தமிழ்ப்புலமையும் ஆங்கில அறிவும் கொண்ட திரு. வி. க. சைவ சமய சித்தாந்த அறிவும் நிறையப் - ജ് ബജ് . ------ مــــمـتـتـ مجم= . تمپ صلى الله عليه وسلم نے | N. : i 4. * , అతి. வி. கலியான சுந்தரனார் - அப்ற்றார். சிறிது காலம் வெஸ்லி கல்லூரியில் தலைமைத் தமிழாசிரிய ராகப் பணியாற்றினார். யாக இருக்கும். கலியாணசுந்தரனார், திரு.வி.க. இளமை முதலே தேசியப் பற்றுக் கொண்ட இவர் தேச பக்தன்' எனும் செய்தி இதழை 1917இல் தொடங்கி நடத்தினார். பிறமொழிச் சொற்கள் கலவாத தூய தமிழில் எழுதவும் பேச வும் முடியும் என்பதை நிலைநிறுத்தி னார். மிகுந்த சொல்லாற்றலும், சிறந்த எழுத்தாற்றலும் கொண்ட இவர் பேச்சும், எழுத்தும் இனிமை இதனால் மக்கள் இவரைத் தமிழ்த் தென்றல் என அழைக்கலாயினர். தொழிலாளர் நலனில் மிகுந்த அன் பும் அக்கரையும் கொண்டவர். இந் தியாவிலேயே முதல் தொழிலாளர் சங்கமான சென்னைத் தொழிலாளர் சங்கத்தை வாடியா எனும் அறிஞரின் துணையாடு 27-4-1918இல் உரு வாக்கினார். பல தொழிலாளர் போராட்டங்ளை முன்னின்று நடத்தி வெற்றி கொண்டார். விடுதலைப் போராட்ட பேரியக்க மான காங்கிரஸ் மூலம் பல அரசியல் போராட்டங்களில் பங்கு கொண்டார். இதற்கு உறுதுணையாக நவசக்தி' எனும் வார இதழை 1920இல் தொடங்கி தொடர்ந்து இரு ப து ஆண்டுகள் நடத்தினார். அவரது எழுத்தால் தமிழ் மொழி, கலை, இலக் கியம், பண்பாட்டு உணர்வுகள் மக்க ளிடம் மறுமலர்ச்சியை ஏற்படுத்தின. இவரது மனைவியும், மக்களும் மறைந்த பின்னர் சமயம், சமூகம், மொழி, கலை, இலக்கியத்துறைகளில் பெருங்கவனம் செலுத்தினார். அரிய நூல்கள் பலவற்றை எழுதி வெளி யிட்டார். சாதி, சமய வேற்றுமை உணர்வுகளைப் போக்கவும் சமரச சன்மார்க்க உணர்வை வளர்க்கவும் பெரும் பாடுபட்டார். இவரது நூல்களில் தமிழ்ச் சோலை அல்லது கட்டுரைத் திரட்டு, தமிழ்த்