பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 1797இல் பிரான்சில் முதல் முறை யாகக் காகிதம் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் 1870இல் மேற்கு வங்கத் தில் காகிதத் தொழிற்சாலை அமைக் கப்பட்டது. இன்று இந்தியாவில் 60 -க்கு மேற்பட்ட சிறிதும், பெரிது மான காகிதத் தொழிற்சாலைகள் உள்ளன. இந்தியா தன் தேவையில் ஐந்தில் ஒரு பங்கை மட்டுமே உற் பத்தி செய்கிறது. உலகில் அதிக மாகக் காகிதம் கனடா, அமெரிக்கா, , ஜப்பான், பின்லாந்து ஆகிய நாடு களில் தயாராகிறது. காந்தியடிகள் : உலக உத்தமர்’ - என்று போற்றப்படும் அண்ணல் காந்தியடிகள் நம் நாட்டிற்கு விடு தலை பெற்றுத் தந்தவர் ஆவார். அதனால் அவரை நாட்டுத் தந்தை' என்ற அடைமொழியால் அழைக் கிறோம். வன்முறையற்ற, வாய்மை யான, அன்பு வழியில் முயன்றால் எப்படிப்பட்ட சாதனையையும் செய்ய முடியும் என்பதை எண்பித்தவர் காந்தியடிகள். பல நூறு ஆண்டு களாக இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்டுவந்த ஆங்கிலப் பேரரசை அன்பு வழியில் அடிபணியச் செய்து இந்தியாவுக்கு விடுதலை வழங்கச் செய்தார். அண்ணல் காந்தியடிகளின் முழுப் பெயர் மோகனதாஸ் கரம்சந்த் காந்தி என்பதாகும். இவர் இந்தியாவின் மேற்குக் கரையோரமுள்ள குஜராத் மாநிலத்தில் கத்தியவார் எனும் பகுதி யிலுள்ள போர்பந்தர் எனுமிடத்தில் 1889 அக்டோபர் இரண்டாம் தேதி பிறந்தார்.தந்தை பெயர் காபா காந்தி, தாயார் பெயர் புத்லிபாய் ஆகும். காந்தியடிகள் இளம் வயது முதலே ஒழுக்க சீலராக வளர்ந்தார். இதற்குக் காரணம் புராணங்களில் வரும் ஒழுக் காந்தியடிகள் கத்தில் சிறந்தவர்களைப் பற்றி இவர் தாயார் அடிக்கடி கூறிவந்ததேயா '# . . . ; * * அண்ணல் காந்தியடிகள் கும். இதனால் எல்லோரிடமும் அன்பு காட்டுவது, பெரியவர்களுக்கு மரி யாதை செலுத்துவது, ஒழுக்க நெறி களைப் பேணுவது ஆகிய உயர் பண் புகளைக் கொண்டு வாழ்ந்தார். இவர் இளமையில் பார்த்த அரிச்சந்திரா நாடகம் இவர் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்திருந்தது. அக்கால வழக்கப்படி மிக இளம் வயதிலேயே கஸ்தூரி பாய் எனும் மங்கையை மணம் செய்துக் கொண் டார். அப்போது கஸ்துாரி பாய்க்கு பதின்மூன்று வயது. பள்ளி இறுதி வகுப்பை முடித்த காந்தியடிகள் சட் டம் பயில இங்கிலாந்து சென்றார். செல்லும் முன் மது குடிப்பதில்லை, மாமிசம் உண்பதில்லை, பிற பெண் களைத் தொடுவதில்லை எனத் தன் தாயாருக்கு உறுதி மொழி தந்து