பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடியரசு போல் மைதானம் எங்கும் பரந்து நிற்பர். கிரிக்கெட் பந்தாட்டம் வேகமாக எறியும் பந்தை நடப்பட் டுள்ள கழிகள் மீது மோதாதவாறு மட்டையால் தடுத்து ஓங்கி அடிக்க வேண்டும். அடித்த பந்தை மைதா னத்தில் நிற்பவர்கள் கையால் எடுக் கும்வரை விக்கெட்டுகளுக்கிடையே மட்டையுடன் ஒடுவர். ஒருமுறை ஒடி னால் ஓர் ஒட்டம் (Run) ஆகும். அடித்த பந்து தரையைத் தொட்டபடி மைதான எல்லைவரை ஓடினால் அது நான்கு ஓட்டங்களுக்குச் சம மாகும். தரையில் படாமல் எல்லை தாண்டி பந்து விழுந்தால் அது 6 ஓட் டங்களுக்குச் சமமாக கணக்கிடப் படும். எறியும் பந்து நடப்பட்ட கழி கள் மீது பட்டால் பந்தடிப்பவர் ஆட் டம் இழப்பர். பந்தடிப்போர் அனை வரும் ஆட்டம் இழந்ததும் அது ஒரு ஆட்டம் (இன்னிங்ஸ்) ஆகும். பொது வாக இரு கட்சியினரும் இரு ஆட்டங் கள் ஆடுவர். இதில் அதிகபட்சம் ஓட்டம் எடுத்தவர்கள் வெற்றி பெற்ற வராகக் கருதப்படுவர். 145 கிறிஸ்துவ சமயம்: உலக சமயங் களில் மிக அதிகமான மக்களால் பின் பற்றப்படும் சமயம் கிறிஸ் துவ சமயம் ஆகும். ஏசுநாத ரின் போதனைகளின் அடிப் படையில் உருவானதாகும் இச் சமயம். தொடக்க காலத்தில் ஒன்று பட்ட கருத்தினராக இச்சம யத்தினர் இருந்தனர். பின் னர், அவர் க ளு க் கு ள் கொள்கை வேறுபாடுகள் தோன்றின. அதன் விளை வாக பல்வேறு பிரிவினர் களாகப் பிரியலாயினர். அப் பிரிவினர்களுள் மிக முக் கியப் பிரிவினர்களாக கத் தோலிக்கரும், பிராட்டஸ் டன்டினரும் உள்ளனர். ஆயினும், இவர்கள் அனை வரும் வேத நூலான பைபி ளையே பின்பற்றி வருகின்றனர். பைபிள் பழைய ஏற்பாடு, புதிய ஏற் பாடு என்ற இரு பெரும் பிரிவு களோடு அமைந்துள்ளது. இறைவன் படைத்த முதல் மனிதர் ஆதாம் தொடங்கி ஏசு கிருஸ்துவரை உள் ளது பழைய ஏற்பாடாகும். இயேசு போதித்த போதனைகள் அடங்கியது புதிய ஏற்பாடு ஆகும். ஏசுநாதர் பிறந்த நாளான டிசம்பர் 25 கிருஸ்துமஸ் பண்டிகை நாளாகும். இறைவனை வணங்குவதே மனித னின் முதல் கடமையாகும். நம்மைப் போன்றே பிறரையும் மதித்து அன்பு காட்ட வேண்டும். மற்றவர்கட்குச் செய்யும் பணி இறைவனுக்குச் செய் யும் பணியாகும். குடியரசு: குடிமக்கள் தேர்ந்தெடுக் கும் பிரதிநிதிகளைக் கொண்டு நடை பெறும் அரசு குடியரசு’ ஆகும். குடிமக்களால், கு டி மக் க ைள க்