பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 கொண்டு, குடிமக்களுக்காக நடை பெறும் அரசு குடியரசு ஆட்சியாகும். நம் நாட்டில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநிலச் சட்டப் பேரவை களுக்கும் நாடாளுமன்றத்திற்கும் தேர்தல் நடைபெறும். பதினெட்டு வயது நிறைந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒட்டு உரிமை உண்டு. இவர்கள் தங்கள் பிரதிநிதி களை இவ்விரு அவைகளுக்கும் தேர்ந்தெடுப்பர். இப்பிரதிநிதிகளைக் கொண்ட இவ்விரு அவைகளும் சட்டங்களை இயற்றுகின்றன. மாநில அள்விலான சட்டங்களை மாநிலச் சட்டப் பேரவைகளும் நாடு முழு மைக்குமான சட்டங்களை நாடாளு மன்றமும் இயற்றும். இவ்விரு அவைகளின் பிரதிநிதி களால் தேர்ந்தெடுக்கும் அமைச்சர் கள் சட்டங்களை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்றுச் செயல்படுவர். குடியரசுத் தலைவர் மக்கள் பிரதிநிதி களால் தேர்ந்தெடுக்கப்படுவார். குடியரசு முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடை பெற்ற போதிலும் நாட்டுத் தலைவ ராக மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத மன்னர் இருப்பார். இதைக் குடியரசு என்று கூறுவதில்லை. ஆட்சி ஜனநாயக முடியரசு என்று கூறப்படும். சான்று: பிரிட்டனில் நடைபெறும் ஆட்சி. நம் இந்திய நாடு 1950 ஜனவரி 26 முதல் குடியரசு நாடு ஆகியது. காண்க: இந்திய அரசமைப்புச் சட்டம், குர்ஆன் : இஸ்லாமியர்களாகிய முஸ்லிம்களின் திருமறை ஆகும். இறைவனாகிய அல்லாஹ் தன் தூதர் நபிகள் நாயகம் முகம்மது நபி (சல்) இத்தகைய குர்ஆன் மூலம் அருளிய இறைவசனங்களின் தொகுப்பு ஆகும். குர்ஆன் என்ப தற்கு ஒதுதல்’ என்பது பொருளாகும். ஜமி மலையில் இறைத்தியானத் தில் இருந்த முகம்மது நபிக்கு ஜிப்ரில் (அலை) எனும் வானவர் மூலம் முதல் இறை வசனம் அருளப்பட்டது. அதி லிருந்து 28 ஆண்டுகள் 486திடன் ஆளில் இறைவனால் அருளப்பட்ட இறை வசனங்களின் தொகுப்பே திருக்குர்ஆன் இறை வேதமாகும். திருக்குர்ஆனில் உள்ள மொத்த இறைவதனங்கள் 6666 ஆகும். இவை 114 அத்தியாயங்களாகப் ιθf)αξ கப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் (சல்)படிக்காதவர். இறை வசனம் இவருக்கு வருமுன் மணியோசை கேட்பதுப்ோல் தோன் றும் அப்போது அவருக்கு ஒருவித மயக்கமான நிலை ஏற்படும். அப் போது வானதுாதர் ஜிப்ரில் (அலை) 'ஒதுவீராக! என்பார். உடனே நபி கள் நாயகம் (சல்) ஒதுவார். அதன் பின் அவர் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்துவிடும். அதன்பின் அதனை மற்றவர்க்குக் கூறுவார். அவர்கள் அதை எழுதி வைப்பார்கள். அவற்றை மக்களுக்கு நபிகள் நாயகம் (சல்) விளக்கிக் கூறுவார். இவ்விதம் மக்கள் நல்வாழ்வு பெற நபிகள் நாயகம் வாயிலாக இறைவன் அருளிய வேத வசனங்கள் அரபி மொழியில் அமைந்துள்ளன. இதில் ஒரே இறைவனாகிய அல் லாஹ்வை எவ்விதம் மனிதர் வணங்க வேண்டும்; எவ்விதம் நல்வழியில் வாழவேண்டும்;நாம் மனித சமுதாயத் திற்கு இறைவழியில் ஆற்றவேண் டிய கடமைகள் என்ன என்பதை குர்ஆன் தெளிவாக எடுத்துரைக்