பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 யடைகின்றன. திரவம் ஆவியான பின் அதனை மீண்டும் திரவமாக மாற்றும் மின் சாதன அமைப்பு அப் பெட்டியிலேயே இருக்கிறது. இவ் வாறு வெப்பத்தால் ஆவியாவதும், அந்த ஆவியே மீண்டும் திரவ மாவதும் தொடர் நிகழ்ச்சியாக அமைவதால் பெட்டிக்குள் எப்போதும் தாழ்ந்த வெப்பமே நிலவுகிறது. பொருள்கள் ஒரே மா தி ரி யாய் குளிர்ந்த நிலையில் இருக்கின்றன. குளிர் பானங்கள் தயாரிக்கவும் காய்கறி, பழங்கள், வெண்ணெய் இறைச்சி போன்றவை கெடாமல் பாதுகாக்கவும் இக் குளிர் பதனப் பெட்டி பெரிதும் பயன்படுகிறது. குளோரின்: இது உயிர்க் கொல்லி நச்சு வாயு ஆகும். நாம் குடிக்கும் நீரில் உள்ள பாக்ட்டீரியகிருமிகளைக் கொல்ல இவ்வாயு சிறிய அளவில் நீரில் கலக்கப்படுகிறது. அதனால் நம் உயிர்க்குத் தீங்கு நேர்வதில்லை. இதை அதிக அளவில் பயன்படுத்தி னாலோ அதிக நேரம், சுவாசித் தாலோ நம் உயிருக்கு ஆபத்து நேரிடும்.இரண்டாம் உலகப் போரின் போது எதிரிகளைக் கொல்ல இந் நச்சு வாயுவே பயன்பட்டது. குளோரின் வாயு ஒரு தனிமம் ஆகும். இதன் நிறம் பச்சை கலந்த மஞ்சள் ஆகும்.மற்ற தனிமங்களோடு கலந்து கிடைக்கும். எரிமலையி லிருந்து வெளிப்படும் வாயுவில் தனி குளோரின் இருப்பதுண்டு. காற்றை விட இரண்டரை மடங்கு அதிகக் கனம் உள்ளது குளோரின். நாம் உணவுக்குப் பயன்படுத்தும் சோடியம் குளோரைடு உப்பில் வேண் டிய அளவு குளோரின் இருக்கிறது. இதிலிருந்தே பெரும்பாலும் குளோ கூட்டுறவு ரின் பிரித்தெடுக்கப்படுகிறது. உப்புக் கரைசலில் மின்சாரத்தைப் பாய்ச்சு வதன்மூலம் சோடியத்தையும் குளோ ரினையும் தனித்தனியே பிரிக்கிறார் கள். குளோரின் வாயுவை எளிதில் திரவமாக மாற்றலாம். குளோரின் நம் அன்றாட வாழ்க் கைக்கு மிக இன்றியமையாத உதவிப் பொருளாக அமைந்துள்ளது. துணி, காகிதக் கூழ் முதலியவற்றைத் தூய் மைப்படுத்தி வெண்மையாக்குவதற் கும் சுத்தம் செய்வதற்கும் குளோரின் மிக முக்கியப் பொருளாகப் பயன்படு கிறது. கூட்டுறவு கூட்டுறவே நாட் டுயர்வு' என்பது பழமொழி. பலர் கூடி ஒன்றிணைந்து ஒரு காரியம் செய்தால் அது எளிதாகவும் சிாப் பாகவும் அமையும். - இத்தகைய கூட்டுறவுப் பண்பு ஓர் இயக்கமாக இங்கிலாந்து நாட்டில் தான், வளர்ந்தது.1844ஆம்ஆண்டில் 28 தொழிலாளர்கள் சேர்ந்த ஒரு கூட்டுறவு இயக்க அமைப்பை உரு வாக்கிப் பண்டக சாலை ஒன்றை நடத்தினர். இந்த பண்டக சாலை இயக்கம் பின்னர் உலகெங்கும் பரவியது. இன்று பள்ளி மாணவர் கூட்டுற வுச் சங்கம் முதல் சமூகத்தில் பல வகையான கூட்டுறவுச் சங்கங்கள் உருவாகியுள்ளன. நகரப் பகுதிகளில் கூட்டுறவுக் கடைகள் பல உண்டு. விவசாயிகளுக்குக் கடன் கொடுத்து வாங்க கூட்டுறவு நாணயச் சங்கங்கள் இருக்கின்றன.தொழிலாளர்கள்,அரசு ஊழியர்கள், மீன் பிடிப்போர், பால் காரர்கள் ஆகிய பல்வேறு தரப்பினர் களும் 'கூட்டுறவுச் சங்கங்களை அமைத்து இயக்குகின்றனர். ரஷ்யா போன்ற சில நாடுகளில் கூட்டுறவு