பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 சூரியன், நட்சத்திரங்கள் எல்லாமே பூமியைச் சுற்றி வருவதாக நம்பிக் கொண்டிருந்தனர். பூமி அசையாது நிலையாக நிற்பது என்றும் நம்பி னார்கள். அதை ஆராய்ச்சி பூர்வ மாகத் தவறு என்று மெய்ப்பித்தவர் கோப்பர் நிக்கஸ் ஆவார். பூமி சூரி யனைச் சிற றுவதோடு தன்னைத். தானே சுற்றிக் கொள்கிறது என் பதையும் கண்டறிந்து கூறினார். பூமி, யைப் போல் பிற கிரகங்களும் சூரி யனையே சுற்றி வருவதாகக் கண் டறிந்து கூறினார். இவர் தம் வானவியல் ஆராய்ச்சி பற்றி ஒரு நூல் எழுதினார். அந்தக் கருத்துகள் கிருஸ்துவ சமயக் கொள் கைக்கு முரணாக இருப்பதால் வெளி யிட அஞ்சி அச்சிடாமல் வைத்திருந் தார். ஆனால் நண்பர்களின் வற் புறுத்தலின் பேரில் வெளியிட முன் வந்து அச்சிட்டார். நூல் வெளியான அன்று எதிர்பாராமல் காலமானார். | சமண மதம்: பழங்காலம் முதல்ே இந்தியாவில் இருந்து வரும் மதங் களில் சமண மதம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இதை ஜைன மதம்” என்றும் கூறுவர். இம்மதத்தைப் பின்பற்றுகிறவர்கள் சமணர் அல்லது ஜைனர் ஆவர். சமண் மதம் ஆரியர்கள் இந்தியாவினுள் நுழை வதற்கு முன்னதாகவே சமண சமயம் இந்தியாவில் உருவாகி இருந்ததாகக் கூறப்படுகிறது. சமண மதத்தின் கோட்பாடுகளை வகுத்து முழுமைப் படுத்தியவர்கள் 12 பேர்கள் ஆவர். இவர்கள் தீர்த்தங்கரர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களில் முதல் தீர்த்தங்கரர் ரிசபதேவர் என்ப வர் ஆவார். பன்னிரண்டாவது தீர்த் தங்கரர் வர்த்தமான மகாவீரர். இவரே இச் சமயத்தை நாடெங்கும் பரப்பியவர். மக்களிடம் இடைவிடா மல் பிரச்சாரம் செய்து நிலை நிறுத்தி யவர். எனவே, பன்னிரண்டு தீர்த் தங்கரர்களில் மக்களால் அதிகம் போற்றப்படுபவர் இவரேயாவார். சமண மதத்தின் உயிர் மூச்சான கொள்கை 'கொல்லாமை'யாகும். அகிம்சையும் நல்லொழுக்கமும் இச் சமயத்தின் இரு கண்களாகும். மற் மகாவீரர் றும் களவு செய்யாமை, பிரம்மச்சரி யம், தவம், ஆகியவையும் அடிப் படைக் கொள்கைகளாகும். ஒவ் வொரு சமணரும் இவற்றைக் கடை பிடித்து ஒழுக வேண்டும் என சமண சமயம் போதிக்கிறது.